கல்வி உதவித்தொகை: கேரளத்தில் ஜூன் 4-ல் அனைத்துக் கட்சி கூட்டம்

கேரளத்தில் ஜூன் 4-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். 
பினராயி விஜயன்  (கோப்புப்படம்)
பினராயி விஜயன் (கோப்புப்படம்)

கேரளத்தில் ஜூன் 4-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். 

காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதில், சிறுபான்மை மக்களுக்கான உதவித்தொகை விவகாரம் தொடர்பாக கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு குறித்து இதில் விவாதிக்கப்படவுள்ளது.

கேரளத்தில் இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் 80:20 என்ற விகிதத்தில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் மாநில அரசின் இந்த உத்தரவுக்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் கல்வி உதவித் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளது.

மக்கள் தொகை அடிப்படையில் கல்வி உதவித் தொகை சதவிகிதம் ஒதுக்கப்பட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் கேரள உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com