ஜம்மு-காஷ்மீர்: நௌஷேராவில் பிச்சையெடுத்த பெண்ணின் குடிசையில் ரூ.2.60 லட்சம்

ஜம்மு-காஷ்மீரின்  நௌஷேரா மாவட்டத்தில் பிச்சையெடுத்து வந்த பெண்ணின் குடிசையிலிருந்து ரூ.2.60 லட்சம் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர்: நௌஷேராவில் பிச்சையெடுத்த பெண்ணின் குடிசையில் ரூ.2.60 லட்சம்
ஜம்மு-காஷ்மீர்: நௌஷேராவில் பிச்சையெடுத்த பெண்ணின் குடிசையில் ரூ.2.60 லட்சம்


நௌஷேரா: ஜம்மு-காஷ்மீரின்  நௌஷேரா மாவட்டத்தில் பிச்சையெடுத்து வந்த பெண்ணின் குடிசையிலிருந்து ரூ.2.60 லட்சம் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

வயதான அப்பெண்மணி, ரஜௌரி மாவட்டத்தில் உள்ள முதியோர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அந்தக் குடிசையில் 30 ஆண்டுகளாக அப்பெண்மணி வசிதது வந்துள்ளார். அவரை ரஜௌரி மாவட்டத்தில் உள்ள முதியோர் காப்பக ஊழியர்கள் நேற்று வந்து அழைத்துச் சென்றனர். 

பிறகு, அந்தக் குடிசையிலிருந்து குப்பைகளை அகற்ற, நகராட்சி ஊழியர்கள் வந்து, குடிசையை சுத்தப்படுத்தியபோது, அங்கிருந்த பல பைகளில் ரூபாய் நோட்டுகளும், நாணயங்களும் குவியல் குவியலாக இருப்ததைப் பார்த்தனர். 
அங்கிருந்த பைகளில் சுமார் 70 - 80 கிலோ நாணயங்கள் இருந்துள்ளன. சுமார் 30 ஆண்டுகளாகப் பிச்சையெடுத்து வந்த அவரிடம் ரூ.2,60,000 பணம் இருந்துள்ளது. தனியாக வசித்து வந்த அவருக்கு, அக்கம் பக்கத்து ஊர்களில் வசிக்கும் பலரும் அவ்வப்போது வந்து பண உதவி செய்து வந்துள்ளனர்.
சில ரூபாய் நோட்டுகள் கிழிந்து கந்தலாகிப் போயிருந்ததையும் பார்த்து, நகராட்சி ஊழியர்கள தனியாக எடுத்து வைத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com