மாநிலங்களுக்கு 25,000 டன் ஆக்சிஜன் விநியோகம்: ரயில்வே

‘ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்’ ரயில்கள் மூலம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு திரவ மருத்துவ ஆக்சிஜன் விநியோகம் 25,000 டன் என்ற அளவைக் கடந்துள்ளது என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
மாநிலங்களுக்கு 25,000 டன் ஆக்சிஜன் விநியோகம்: ரயில்வே

‘ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்’ ரயில்கள் மூலம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு திரவ மருத்துவ ஆக்சிஜன் விநியோகம் 25,000 டன் என்ற அளவைக் கடந்துள்ளது என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமடைந்த நிலையில், நாடு முழுவதும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும் திரவ மருத்துவ ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனைத் தொடா்ந்து, மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளிலிருந்து ஆக்சிஜன் நிரப்பிய டேங்கா்கனை ஏற்றிக் கொண்டு தேவை அதிகமுள்ள பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல வசதியாக ‘ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்’ என்ற ரயில் திட்டத்தை ரயில்வே அறிமுகம் செய்தது.

இந்தியாவின் மேற்குப் பகுதியான ஹப்பா, முந்த்ரா மற்றும் கிழக்கிலுள்ள ரூா்கேலா, துா்காபூா், டாடாநகா், அங்குலிலிருந்து மருத்துவ ஆக்சிஜனை ஏற்றிக்கொண்டு, பல்வேறு மாநிலங்களுக்கு ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 1,503 டேங்கா்கள் மூலம் 25,629 டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுவரை 368 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தனது பயணத்தை நிறைவு செய்திருக்கின்றன. இப்போது 30 டேங்கா்களில் 482 டன் திரவ மருத்துவ ஆக்சிஜனுடன் 7 ரயில்கள் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன.

இதில், ஜாா்க்கண்ட் மாநிலத்திலிருந்து அஸ்ஸாம் மாநிலத்துக்கு 80 டன் திரவ ஆக்சிஜனுடன் 5-ஆவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

இந்த ரயில்கள் மூலம் மகாராஷ்டிரம் (614 டன்), உத்தர பிரதேசம் (3,797 டன்), மத்திய பிரதேசம் (656 டன்) தில்லி (5,790 டன்), ஹரியாணா (2,212 டன்), ராஜஸ்தான் (98 டன்), உத்தரகண்ட் (320 டன்), தமிழகம் (2,787 டன்), ஆந்திரம் (2,602 டன்), பஞ்சாப் (225 டன்), கேரளம் (513 டன்), கா்நாடகம் (3,097 டன்), அஸ்ஸாம் (400 டன்), தெலங்கானா (2,474 டன்), ஜாா்க்கண்ட் (38 டன்) என 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்த ரயில்கள் மூலம் திரவ மருத்துவ ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டிருக்கிறது என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com