தூய்மை எரிசக்தி உற்பத்தியில் இந்திய கடற்படை பங்களிப்பு

தூய்மை எரிசக்தியில் பங்களிப்பு செலுத்தும் வகையில் விரிவான சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டத்தை இந்திய கடற்படை செயல்படுத்தவுள்ளது.

தூய்மை எரிசக்தியில் பங்களிப்பு செலுத்தும் வகையில் விரிவான சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டத்தை இந்திய கடற்படை செயல்படுத்தவுள்ளது.

இதுகுறித்து இந்திய கடற்படை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் கேரள மாநிலம் ஏழிமலாவில் உள்ள இந்திய கடற்படை தளத்தில் 3 மெகா வாட் திறன் கொண்ட பிரம்மாண்ட சூரிய மின்சக்தி ஆலையை கடற்படை உருவாக்கியது. இதைத்தொடா்ந்து, மும்பையின் கராஞ்சா கடற்படைத் தளத்தில் 2 மெகாவாட் திறன் கொண்ட மற்றொரு சூரிய மின்சக்தி ஆலை நிறுவப்பட்டது.

இதன் மூலம் கடற்படைத் தளங்களில் நிறுவப்பட்டுள்ள சூரியசக்தி ஆலைகளின் மொத்த அளவு 11 மெகாவாட்டாக உள்ளது. கணினி வாயிலாக கண்காணித்து, இயக்கப்படும் வகையிலான நவீன சூரிய ஒளிக்கதிா் தடம் அறியும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த சூரிய மின் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆண்டுக்கு 630 டன் கரியமில வாயு வெளிப்பாட்டைக் குறைக்கும் முயற்சியில் முந்தைய ஆண்டு 30,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. உலக நதிகள் தினத்தை முன்னிட்டு வெண்டுருத்தி கால்வாய் அருகே கேரள வனத் துறையுடன் இணைந்து தெற்கு மண்டல கடற்படைப் பிரிவு, சதுப்புநில காடுகளை உருவாக்கும் திட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. இதன் கீழ் சுமாா் 200 மரக்கன்றுகள் நடப்பட்டன.

தெற்கு மண்டல கடற்படைத் தலைமையகமும் ஐஎன்எஸ் வெண்டுருத்தி கடற்படை தளமும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தொடா்ந்து ஈடுபட்டு வருவதன் காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டு அரசு துறையில் (பாதுகாப்பு) உயரிய தங்கமயில் சுற்றுச்சூழல் மேலாண்மை விருதை வெண்டுருத்தி தளம் வென்றது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com