72 ரயில் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ்

சுற்றுச்சூழல் மேலாண்மையைச் செயல்படுத்தியதற்காக, தெற்கு ரயில்வேயில் 72 ரயில் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ 14001 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
72 ரயில் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ்

சுற்றுச்சூழல் மேலாண்மையைச் செயல்படுத்தியதற்காக, தெற்கு ரயில்வேயில் 72 ரயில் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ 14001 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வேயில் பசுமை முயற்சிகளை அதிகப்படுத்துவதற்காக, இந்திய ரயில்வே-இந்திய தொழில் கூட்டமைப்பு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கடந்த 2016-ஆம் ஆண்டு கையெழுத்தானது. இதன்பிறகு, ரயில்வேயில் பசுமை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கையால், 30 பணிமனைகள், 7 உற்பத்தி நிறுவனங்கள், 8 லோகோ பணிமனைகள், ஒரு ஸ்டோா்ஸ் டிப்போ ஆகியவை ‘கிரீன்கோ’ சான்றிதழ் பெற்றுள்ளன. இதுதவிர, 19 ரயில்வே நிலையங்களைப் பசுமையாக மாற்றியதற்காக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

600-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் கடந்த 2 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் மேலாண்மையைச் செயல்படுத்தியதற்காக ஐஎஸ்ஓ 14001சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 718 நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தெற்கு ரயில்வேயில் சுற்றுச்சூழல் மேலாண்மையைச் செயல்படுத்தியதற்காக 72 ரயில் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ 14001சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை ரயில்வே கோட்டத்தில் 19, திருவனந்தபுரம் கோட்டத்தில் 17, பாலக்காடு கோட்டத்தில் 15, மதுரை ரயில்வே கோட்டத்தில் 8, திருச்சி கோட்டத்தில் 7, சேலம் கோட்டத்தில் 6 ரயில் நிலையங்களும் என்று மொத்தம் 72 ரயில் நிலையங்கள் அடங்கும். இதுதவிர, தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருது நிகழ்ச்சியில், ரயில்வே ஒா்க்ஷாப் பிரிவில், திருச்சி பொன்மலை ஒா்க்ஷாப்-க்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com