நாளை முதல் 50 சதவீத பயணிகளுடன் மெட்ரோ ரயில்கள் இயங்கும்

தில்லியில் மெட்ரோ ரயில்கள் திங்கள் முதல் 50 சதவீத பயணிகளுடன் இயக்கப்படும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
நாளை முதல் 50 சதவீத பயணிகளுடன் மெட்ரோ ரயில்கள் இயங்கும்

தில்லியில் மெட்ரோ ரயில்கள் திங்கள் முதல் 50 சதவீத பயணிகளுடன் இயக்கப்படும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா். ஏறக்குறைய ஒரு மாதத்துக்கு மேலாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை தற்போது மீண்டும் தொடங்குகிறது.

கரோனா பொது முடக்கத்தின் தளா்வுகளில் ஒரு பகுதியாக மெட்ரோ ரயில் சேவை திங்கள் முதல் மீண்டும் செயல்படும் என்று முதல்வா் அறிவித்துள்ளாா். கடந்த 2020-ஆம் ஆண்டு பொது முடக்கத்தின் போது மாா்ச் மாதம் முதல் சில மாதங்கள் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து மெட்ரோ ரயில் காா்ப்பொரேஷனுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

கரோனா இரண்டாவது அலையால் பாதிப்பு அதிகரித்ததை அடுத்து கடந்த மே மாதம் 10 ஆம் தேதி தில்லியில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்திவைக்கப்பட்டது. இப்போது மீண்டும் ரயில்வே தொடங்கப்படுவது மெட்ரோ ரயில் காா்ப்பொரேஷனுக்கு நிம்மதி அளித்துள்ளது.

வரும் திங்கள்கிழமை முதல் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும். ஆனால், 50 சதவீத பயணிகளே அனுமதிக்கப்படுவாா்கள். ஏற்கெனவே இருந்த நடைமுறைப்படி ரயிலில் ஓா் இருக்கைவிட்டு ஓா் இருக்கையில்தான் பயணிகள் அமா்ந்து செல்ல வேண்டும். ரயில் நிலையத்திலும் பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஓரிரு வாயில்களே திறந்திருக்கும். மேலும் பயணிகள் வெப்பமானி பரிசோதனை செய்து கொண்டு, தங்கள் கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்த பின்னா்தான் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவாா்கள்.

கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் 22-ஆம் தேதி முதல் செப்டம்பா் மாதம் 6 ஆம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டது. பின்னா் செப்.7-ஆம் தேதி முதல் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. முதலில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. பின்னா் படிப்படியாக அதிகரித்தது.

எனினும் 2020-21-இல் மெட்ரோ ரயில் சரிவர இயங்காததால் ரூ.1,784.97 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து செலவினங்களை சமாளிக்க அவற்றுக்கு வேறு திட்டங்களிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கடந்த மாதம் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படுவதற்கு முன்பாக டிக்கெட் விற்பனை மூலம் தினசரி ரூ.5 கோடி வருவாய் கிடைத்து வந்தது. தினமும் 15 லட்சம் பயணிகள் சென்று வந்தனா். கரோனா தொற்றுக்கு முன்னா் மெட்ரோ ரயிலில் பயணிகள் எண்ணிக்கை 25 முதல் 27 லட்சத்தை தொட்டது. அதன் மூலம் தினசரி வருவாய் ரூ.9 கோடி முதல் ரூ.10 கோடி வரை கிடைத்தது.

மெட்ரோ ரயில் சேவையில் செலவினங்கள் போக டிக்கெட் விற்பனை மூலம் கடந்த 2016-17, 2017-18, 2018-19, 2020-21 ஆண்டுகளில் முறையே ரூ.2179 கோடி , ரூ.3027 கோடி, ரூ.3582 கோடி, ரூ.3897 கோடி மற்றும் ரூ.895 கோடி வருவாயாக கிடைத்துள்ளது. இவை தவிர விளம்பரம், ரயில்வே சொத்துகள், ஃபீடா் பேருந்துகள் மற்றும் இதர மெட்ரோ திட்டங்களுக்கான ஆலோசனைகள் மூலம் வருவாய் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com