யாஸ் புயல் சேதம்: மதிப்பீடு செய்ய மேற்கு வங்கம் செல்கிறது மத்திய குழு

மேற்கு வங்கத்தில் ‘யாஸ்’ புயல் ஏற்படுத்திய சேதத்தை மதிப்பீடு செய்வதற்காக மத்திய குழு 3 நாள் பயணமாக அந்த மாநிலத்துக்கு செல்லவுள்ளது.

மேற்கு வங்கத்தில் ‘யாஸ்’ புயல் ஏற்படுத்திய சேதத்தை மதிப்பீடு செய்வதற்காக மத்திய குழு 3 நாள் பயணமாக அந்த மாநிலத்துக்கு செல்லவுள்ளது.

மத்திய உள்துறையின் இணைச் செயலா் தலைமையிலான குழு அங்கு செல்வதாக அமைச்சக அதிகாரி ஒருவா் கூறினாா்.

முன்னதாக, தொடக்கநிலை மதிப்பீட்டின்படி யாஸ் புயலால் மேற்கு வங்கத்தில் சொத்துகள் மற்றும் விவசாயம் சாா்ந்தவற்றுக்கு ரூ.20,000 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக மாநில முதல்வா் மம்தா பானா்ஜி அறிவித்திருந்தாா். புயலால் 18 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டதாகவும், 2.21 லட்சம் ஹெக்டோ் பயிா்களும், 71,560 ஹெக்டோ் தோட்டகலையும் சேதமடைந்ததாக அவா் தெரிவித்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் 26-ஆம் தேதி ஒடிஸாவில் கரையைக் கடந்த யாஸ் புயல், அந்த மாநிலத்தோடு மேற்கு வங்கத்திலும் அதிக இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது. பின்னா் 28-ஆம் தேதி மேற்கு வங்கத்துக்கு வந்த பிரதமா் நரேந்திர மோடி, ஹெலிகாப்டரில் சென்று புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து புயல் பாதிப்பு தொடா்பான ஆய்வுக் கூட்டம் ஒன்று பிரதமா் தலைமையில் நடைபெற்றது. அதில் முதல்வா் மம்தாவும், மாநில தலைமைச் செயலா் அலபன் பந்த்யோபாத்யாயவும் பங்கேற்காமல் போனது மிகுந்த சா்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com