கருப்புப் பூஞ்சை: ஜூன் 1 முதல் 3.21 லட்சம் ஆம்போடெரிசின் -பி ஒதுக்கீடு

கருப்புப் பூஞ்சை தொற்றுக்கு ஜூன் 1-ம் தேதி முதல் 3.21 லட்சம் ஆம்போடெரிசின் -பி மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இது குறித்து மாநிலங்களுக்கான ரசாயனம் மற்றும் உரத் துறையைச் சேர்ந்த மன்சுக் மாண்டவியா சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது, மாநிலங்களுக்காக 3,21,100 ஆம்போடெரிசின்-பி மருந்தை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. 

மேலும் ஆம்போடெரிசின் -பி மருந்து உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மருந்தகத் துறை தேவைக்கு ஏற்ப சுமூகமாக உற்பத்திகளை உறுதி செய்து வருகிறது என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com