தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசிகளுக்கு விலை நிர்ணயம்: மத்திய அரசு உத்தரவு

தனியார் மருத்துவமனைகளில் அளிக்கப்படும் கரோனா தடுப்பூசிகளுக்கான விலையை நிர்ணயம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 
தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசிகளுக்கு விலை நிர்ணயம்
தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசிகளுக்கு விலை நிர்ணயம்


புதுதில்லி: தனியார் மருத்துவமனைகளில் அளிக்கப்படும் கரோனா தடுப்பூசிகளுக்கான விலையை நிர்ணயம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு, தனியார் மருத்துவமனைகளில் அளிக்கப்படும் கரோனா தொற்று தடுப்பூசிகளுக்கு ஒரே மாதிரியான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி ரூ.789-க்கும், கோவாக்சின் முதல் தவணை ரூ.1,410-க்கும்,  ஸ்புட்னிக்-வி தடுப்பூசி சேவை கட்டணங்களுடன் ரூ.1,145-க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் தனியார் மருத்துவமனைகளுக்கு அதிகபட்ச சேவை கட்டணமாக ரூ.150 வசூலிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்குமாறு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ள மத்திய அரசு, கூடுதல் கட்டணம் வசூலிக்க எந்தெவொரு தனியார் தடுப்பூசி மையம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 

ஒவ்வொரு தடுப்பூசிக்கும் அதிகபட்ச விலை அவற்றின் உற்பத்தியாளர்கள் அறிவித்த விலையின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளதால், தனியார் தடுப்பூசி மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ள அதிகபட்ச விலையை தாண்டக்கூடாது என்று மத்திய  சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அரசால் நடத்தப்பட்டும் நிறுவனங்களில் தகுதியானவர்கள் அனைவருக்கும் இந்த தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும் என்று பிரதமர் நரோந்திர மோடி தனது உரையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com