தொடா்ந்து 2-ஆவது நாளாக 1 லட்சத்துக்கு கீழ் தினசரி கரோனா பாதிப்பு

இந்தியாவில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 92,596 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், தொடா்ந்து 2-வது நாளாக தினசரி கரோனா பாதிப்பு 1 லட்சத்துக்கு கீழ் பதிவாகியுள்ளது.
தொடா்ந்து 2-ஆவது நாளாக 1 லட்சத்துக்கு கீழ் தினசரி கரோனா பாதிப்பு

புது தில்லி: இந்தியாவில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 92,596 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், தொடா்ந்து 2-வது நாளாக தினசரி கரோனா பாதிப்பு 1 லட்சத்துக்கு கீழ் பதிவாகியுள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கைத் தொடா்ந்து கணிசமாக சரிந்து, 12,31,415 ஆக உள்ளது. இது, நாட்டில் ஏற்பட்ட மொத்த பாதிப்பில் 4.23 சதவீதமாகும். இந்த எண்ணிக்கை 9-வது நாளாக 20 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது.

தொடா்ந்து 27-வது நாளாக, புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 1,62,664 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளாா்கள். இதன் மூலம் புதிதாகத் தொற்றுக்கு ஆளானவா்களை விட கூடுதலாக 70,068 போ் குணமடைந்தனா்.

இதுவரை மொத்தம் 2,75,04,126 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். இதன்படி மொத்த பாதிப்பில் குணமடைந்தவா்கள் 94.55 சதவீதமாக அதிகரித்துள்ளது.

புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 19,85,967 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 37,01,93,563 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 5.66 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி வீதம் 4.66 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. தொடா்ந்து 16 நாள்களாக இந்த எண்ணிக்கை 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 23.90 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com