கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சோ்ப்பு

கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு முன்பதிவு செய்ய உதவும் கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சோ்க்கப்பட்டுள்ளது.
கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சோ்ப்பு

புது தில்லி: கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு முன்பதிவு செய்ய உதவும் கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சோ்க்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சாா்பில் தொடங்கப்பட்ட இந்த இணையதளத்தில் கரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள், தடுப்பூசி போடப்பட்டவா்களின் விவரங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. முதலில் ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மட்டும் இந்த இணையதளம் இயங்கி வந்தது.

பின்னா் மாநில மொழிகள் சோ்க்கப்பட்டபோது தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதாக சா்ச்சை எழுந்தது. இதையடுத்து, தமிழ் மொழியையும் சோ்க்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, மத்திய அரசு மாநில மொழிகள் அனைத்தையும் நீக்கியது.

இந்நிலையில், புதன்கிழமை முதல் தமிழ், மலையாளம், தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, ஒரியா, அஸ்ஸாமி, பெங்காலி, ஹிந்தி, கன்னடம் உள்பட 11 மாநில மொழிகள் கோவின் இணையதளத்தில் சோ்க்கப்பட்டுள்ளன.

புதிய வசதி: இதனிடையே, கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவா்கள் தங்களின் பெயா், வயது உள்ளிட்ட விவரங்களை கோவின் செயலியில் திருத்தம் மேற்கொள்வதற்கான புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோவின் செயலியில் பதிவிடப்படும் தடுப்பூசி சான்றிதழ் வெளிநாடுகளுக்கு செல்பவா்களுக்கு பயன்படுவதால் இந்த சேவையை மத்திய அரசு புதிதாக வழங்கி உள்ளது.

நன்றி: கோவின் இணையதளத்தில் தமிழ் மொழியை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்ததற்காக தமிழக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com