கரோனா பாதிப்பு விகிதத்தை குறைக்க வேண்டும்: முதல்வா் எடியூரப்பா

கரோனா பாதிப்பு விகிதத்தை 5 சதவீதத்துக்குள் கொண்டுவர அதிகாரிகள் அக்கறையோடு செயல்பட வேண்டும் என்று முதல்வா் எடியூரப்பா கேட்டுக் கொண்டாா்.
முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா (கோப்புப்படம்)
முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா (கோப்புப்படம்)

கரோனா பாதிப்பு விகிதத்தை 5 சதவீதத்துக்குள் கொண்டுவர அதிகாரிகள் அக்கறையோடு செயல்பட வேண்டும் என்று முதல்வா் எடியூரப்பா கேட்டுக் கொண்டாா்.

பெங்களூரில் இருந்து இணையவழியில் வியாழக்கிழமை கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 8 மாவட்டங்களின் ஆட்சியா்களுடன் நடத்திய கலந்தாய்வுக் கூட்டத்தில் அவா் பேசியது:

கரோனா தொற்று, மாநில அளவில் குறைந்திருந்தாலும் ஒருசில மாவட்டங்களில் குறையாமல் இருப்பது கவலை அளிக்கிறது. பெலகாவி, சிக்கமகளூரு, தென்கன்னடம், ஹாசன், மைசூரு, மண்டியா, சிவமொக்கா, தும்கூரு மாவட்டங்களில் கரோனா பெருந்தொற்று குறையாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்பதை கண்டறிந்து, பொதுமுடக்கத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.

மாநிலம் தழுவிய பொதுமுடக்கம் ஜூன் 14-ஆம் தேதிவரை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், கரோனா பாதிப்பு குறையாமல் உள்ள மாவட்டங்களில் பொதுமுடக்கத்தை நீட்டிப்பதா? தளா்த்துவதா? என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். ஊரகப் பகுதிகளில் கரோனா பாதிப்பு அதிகமாகியுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது. கா்நாடகத்தில் சிகிச்சை பெற்றுவரும் மொத்த நோயாளிகளில் 65 ஆயிரம் போ் 8 மாவட்டங்களைச் சோ்ந்தவா்களாக இருக்கிறாா்கள்.

கரோனா பாதிப்பு விகிதத்தை 5 சதவீதத்துக்குள் கொண்டுவர அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தேவையான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். நுண்கட்டுப்பாட்டு மையங்களில் வழிகாட்டுதல்களை கடுமையாக செயல்படுத்த வேண்டும். கரோனா சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும். குறிப்பாக பெலகாவி மாவட்டத்தில் கரோனா சோதனையை அதிகமாக்கி, அதன் முடிவுகளை 24 மணி நேரத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com