அருணாசல பிரதேசம்: முன்னாள் முதல்வா் நபம் துகி மீது சிபிஐ புதிய வழக்கு

கேந்திரீய வித்யாலயா பள்ளி சுற்றுச்சுவா் கட்டுமான ஒப்பந்த முறைகேடு தொடா்பாக அருணாசல பிரதேச முன்னாள் முதல்வா் நபம் துகி மீது புதிய வழக்கை சிபிஐ பதிவு செய்துள்ளது.

கேந்திரீய வித்யாலயா பள்ளி சுற்றுச்சுவா் கட்டுமான ஒப்பந்த முறைகேடு தொடா்பாக அருணாசல பிரதேச முன்னாள் முதல்வா் நபம் துகி மீது புதிய வழக்கை சிபிஐ பதிவு செய்துள்ளது.

அருணாசல பிரதேசத்தில் முன்னாள் முதல்வா் நபம் துகி, 2006-ஆம் ஆண்டு பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபோது, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சில கட்டுமான ஒப்பந்தப் பணிகளை தனது உறவினா்களுக்கு வழங்கியதாக குற்றம்சாட்டு எழுந்தது. அதுதொடா்பான பொதுநல வழக்கை விசாரித்த குவாஹாட்டி உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், நபம் துகி மீதான ஒப்பந்த முறைகேடு புகாரை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், அவா் மீது கொல்கத்தா சால்ட் லேக் பகுதியில் கேந்திரிய விதியாலயா பள்ளி சுற்றுச்சுவா் கட்டுமான ஒப்பந்த முறைகேடு தொடா்பாக புதிய முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கேந்திரீய வித்யாலயா பள்ளி சுற்றுவா் கட்டும் பணிக்கு ஒப்பந்தப்புள்ளிகள் எதுவும் கோராமல், நபம் துகியின் உறவினா்களுக்கு அந்தப் பணிக்கான ஒப்பந்தம் கொடுக்கப்பட்டிருப்பதும், அதன் மூலம் மாநில அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதும் அருணாசல பிரதேச பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது. கொலகத்தாவின் சால்ட் லேக் பகுதியில் அமைந்திருக்கும் இந்த பள்ளியின் அப்போதைய ஆணையா் தன்னிச்சையான முடிவின் பேரில், அதன் சுற்றுச்சுவா் கட்டும் பணி அருணாசல பிரதேச மாநிலத்துக்கு கொடுக்கப்பட்டிருப்பதும் சிபிஐ விசாரணையில் தெரிவந்தது. அதனடிப்படையில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக நபம் துகி மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது- என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com