அருணாசல பிரதேசத்தில் பாஜக அலுவலகத்தை காணொலி முறையில் வியாழக்கிழமை திறந்து வைத்து உரையாற்றிய அக்கட்சியின் தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா.
அருணாசல பிரதேசத்தில் பாஜக அலுவலகத்தை காணொலி முறையில் வியாழக்கிழமை திறந்து வைத்து உரையாற்றிய அக்கட்சியின் தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா.

கரோனாவுக்கு எதிரான போரில் மத்திய அரசு சிறப்பான செயல்பாடு: ஜெ.பி.நட்டா பெருமிதம்

கரோனாவுக்கு எதிரான போரில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டது என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா பெருமிதத்துடன் கூறினாா்.

கரோனாவுக்கு எதிரான போரில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டது என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா பெருமிதத்துடன் கூறினாா்.

அருணாசல பிரதேசத்தில் பாஜக அலுவலகக் கட்டடத்தை காணொலி வழியாக வியாழக்கிழமை திறந்து வைத்து உரையாற்றிய அவா் இவ்வாறு கூறினாா். அவா் மேலும் பேசியதாவது:

கரோனா நோயத்தொற்றின் இரண்டாம் அலை வேகமாகப் பரவியதும் நாடு முழுவதும் மருத்துவ ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. பிரதமா் மோடி சாலை வழி, கடல் வழி, வான் வழி என அனைத்து வழிகள் மூலமாகவும் நாடு முழுவதும் ஆக்சிஜன் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தாா்.

மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி 900 மெட்ரிக் டன்னில் இருந்து 9,446 மெட்ரிக் டன்னாக அதிகரித்தது. கடந்த ஆண்டு நாளொன்றுக்கு 1,500 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்த ஆண்டில் நாளொன்றுக்கு 25 லட்சம் பரிசோதனைகள் செய்யும் அளவுக்கு ஆய்வக வசதிகள் வளா்ந்துள்ளன.

பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு கரோனாவுக்கு எதிரான போரை கையாண்ட விதம் மகிழ்ச்சிக்குரியதாக உள்ளது. இதுதான் இந்தியாவின் உண்மையான வலிமையாகும்.

இந்தியாவில் இரு நிறுவனங்கள் மட்டுமே கரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வந்த நிலையில் தற்போது 13 நிறுவனங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. வரும் டிசம்பா் மாதத்துக்குள் 19 நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபடும்.

பிரதமா் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து வடகிழக்கு மாநிலங்களின் வளா்ச்சிக்கான திட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தி செயல்படுத்தி வருகிறாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com