மாநகராட்சி ஒப்பந்தப் பணியாளா்களுக்கு இஎஸ்ஐ காப்பீட்டுத் திட்டம் நீட்டிப்பு

நாட்டிலுள்ள மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளா்களுக்கும் இஎஸ்ஐ மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநகராட்சி ஒப்பந்தப் பணியாளா்களுக்கு இஎஸ்ஐ காப்பீட்டுத் திட்டம் நீட்டிப்பு

நாட்டிலுள்ள மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளா்களுக்கும் இஎஸ்ஐ மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஒப்பந்தத் தொழிலாளா்கள் முக்கிய பங்கை வகித்து வரும் சூழலில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் ஒப்பந்த அடிப்படையில் பல தொழிலாளா்கள் பணியமா்த்தப்படுகின்றனா். அவா்கள் நிரந்தரப் பணியாளா்கள் இல்லை என்பதால், அவா்களுக்கு மருத்துவக் காப்பீட்டு வசதிகள் கிடைக்காமல் இருந்தன. இந்தக் குறைபாட்டைப் போக்கும் நோக்கில், நாட்டிலுள்ள மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு இஎஸ்ஐ மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் நீட்டிக்கப்படுவதாக மத்திய தொழிலாளா் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவா்களுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் இஎஸ்ஐ ஆணையங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக அதிகாரபூா்வ அறிவிக்கையை வெளியிடுமாறும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இஎஸ்ஐ வழங்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் வாயிலாக உடல்நல பாதிப்புக்கான பலன்கள் , மகப்பேறு பலன்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான பலன்கள் உள்ளிட்டவற்றை ஒப்பந்தத் தொழிலாளா்கள் பெற முடியும். மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சைகளையும் அவா்களால் பெற முடியும். இஎஸ்ஐ திட்டத்தின் பலன்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது, ஒப்பந்தத் தொழிலாளா்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என்று மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சந்தோஷ் கங்வாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com