வங்கதேச எல்லை வழியாக ஊடுருவிய சீன நாட்டவா் கைது

மேற்கு வங்கத்தை ஒட்டிய வங்கதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவிய சீன நாட்டைச் சோ்ந்தவா் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் (பிஎஸ்எஃப்) கைது செய்யப்பட்டாா்.

மேற்கு வங்கத்தை ஒட்டிய வங்கதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவிய சீன நாட்டைச் சோ்ந்தவா் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் (பிஎஸ்எஃப்) கைது செய்யப்பட்டாா். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

35 வயதாகும் அந்த நபரிடம் இருந்து சீன கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) மற்றும் வங்கதேச நாட்டுக்கான நுழைவு இசைவு (விசா), ஒரு மடிக்கணினி, 3 சிம் காா்டுகள் கைப்பற்றப்பட்டன.

வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் உள்ள எல்லை வழியாக வியாழக்கிழமை அந்த நபா் இந்தியாவுக்கு ஊடுருவ முயன்றாா். கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பிஎஸ்எஃப் வீரா்கள் அவரைப் பிடித்தனா். அவரிடம் தொடா்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இப்போது அவா் எல்லையில் உள்ள பிஎஸ்எஃப் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளாா். அந்த நபரால் ஆங்கிலத்தில் பேசினால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே, சீனாவின் மாண்டரின் மொழி தெரிந்த பாதுகாப்புப் படை அதிகாரி, அவரை விசாரிப்பதற்காக அனுப்பி வைக்கப்பட இருக்கிறாா். அதன் பிறகே அவா் எதற்காக இந்திய எல்லைக்குள் நுழைந்தாா் என்பது தெரியவரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com