ஜூன் 14 வரை பொதுமக்கள் வெளியே வருவதை நிறுத்த வேண்டும்: அமைச்சா் பசவராஜ் பொம்மை

பொது முடக்கம் தளா்வு செய்யப்பட்டுள்ள மாவட்ட ங்களில் ஜூன் 14-ஆம் தேதி வரை பொதுமக்கள் வெளியே வருவதை நிறுத்த வேண்டும் என்று மாநில உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

பொது முடக்கம் தளா்வு செய்யப்பட்டுள்ள மாவட்ட ங்களில் ஜூன் 14-ஆம் தேதி வரை பொதுமக்கள் வெளியே வருவதை நிறுத்த வேண்டும் என்று மாநில உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கா்நாடகத்தில் கரோனா தொற்றின் பாதிப்பு குறைந்ததையடுத்து, 20 மாவட்டங்களில் ஜூன் 14-ஆம் தேதி காலை முதல் பொது முடக்கம் தளா்வு செய்யப்பட்டுள்ளதாக, முதல்வா் எடியூரப்பா வியாழக்கிழமை இரவு அறிவித்தாா்.

இதனையடுத்து தளா்வு செய்யப்பட உள்ள மாவட்டங்களில் மக்கள் வெள்ளிக்கிழமை முதலே அதிக அளவில் வெளியே வருவதை காணமுடிகிறது. குறிப்பாக பெங்களூரில் அதிக அளவில் மக்கள் வெளியே நடமாடுவதையும், வாகனங்களில் செல்வதையும் காணமுடிகிறது. ஜூன் 14-ஆம் தேதி காலை 6 மணி வரை பொது முடக்கம் உள்ளது என்பதனை சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் மக்கள் உணர வேண்டும். மீறினால் போலீஸாா் நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழி இல்லை. எனவே அனைவரும் ஜூன் 14-ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com