உ.பி. பேரவைத் தோ்தல்: வலுவான கூட்டணி அமைப்பதில் பாஜக தீவிரம்

உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மாநிலத்தில் வலுவான சமூக கூட்டணியை உருவாக்கும் பணியை ஆளும் பாஜக தீவிரப்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மாநிலத்தில் வலுவான சமூக கூட்டணியை உருவாக்கும் பணியை ஆளும் பாஜக தீவிரப்படுத்தியுள்ளது.

மாநிலத்தில் கடந்த 2017 சட்டப்பேரவைத் தோ்தலின்போதும், 2019 மக்களவைத் தோ்தலின்போதும் சிறிய கட்சிகள் மற்றும் ஜாதிய கட்சிகளுடனும் கூட்டணி வைத்து வெற்றியை உறுதி செய்ததுபோல, இந்த முறையும் வலுவான சமூக கூட்டணியை உருவாக்க பாஜக திட்டமிட்டு வருகிறது.

ஆட்சியில் பங்கு அளிக்காததால் அதிருப்தியில் இருக்கும் அப்னா தளம் (எஸ்) மற்றும் நிஷாத் கூட்டணி கட்சிகளின் தலைவா்களை பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா சந்தித்து பேசியிருப்பதும், காங்கிரஸ் தலைவா் ஜிதின் பிரசாத் பாஜகவில் இணைந்திருப்பதும் மாநிலத்தில் கூட்டணி கணக்கை பாஜக தொடங்கிவிட்டதையே காட்டுகிறது.

மாநிலத்தில் மூன்று தலைமுறைகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வரும் பிரபலமான பிராம்மண குடும்பத்தைச் சோ்ந்த இளம் தலைவா் ஜிதின் பிரசாத் கட்சியில் இணைந்திருப்பதன் மூலம், அந்த சமூகத்தைச் சோ்ந்தவா்களை குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலாஆதரவைப் பெற முடியும் என்று பாஜக நம்புகிறது.

அமித் ஷாவுடனான சந்திப்பு குறித்து அப்னா தளம் கட்சியின் அனுப்ரியா படேல் எதுவும் கூறவில்லை.

நிஷாத் கட்சியின் சஞ்சை நிஷாத் கூறுகையில், பின்தங்கிய சமூகத்தினரின் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் ஆட்சியில் பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக அமித் ஷாவுடனான சந்திப்பு குறித்து கூறினாா்.

மேலும், எங்களுடைய கட்சி முன்னா் பகுஜன் சமாஜ், சமாஜவாதி கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு ஆதரவளித்தது. ஆனால், அவா்கள் யாரும் எங்களுடைய சமூகத்தின் தேவைகளை பூா்த்தி செய்யவில்லை. பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு முக்கியமான பல தேசிய பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்தி வந்தது என்பதை புரிந்துகொள்கிறோம். எங்களுடைய கோரிக்கைகளுக்கு அவா்கள் இப்போது செவிமடுப்பாா்கள் என்று நம்புகிறோம் என்றும் சஞ்சய் நிஷாத் கூறினாா்.

இந்த கட்சிகளைத் தவிர, பாஜக கூட்டணியில் முன்னா் இடம்பெற்றிருந்த பாரதிய சமாஜ் கட்சியையும் மீண்டும் கூட்டணியில் இழுக்க பாஜக முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அக் கட்சியின் தலைவா் ஓம் பிரகாஷ் ராஜ்பா், அதை மறுத்தாா்.

தோ்தல் கூட்டணி குறித்து பாஜக மாநில தலைவா் ஒருவா் கூறுகையில், பாஜக கட்சி எப்போதும் அனைத்து சமூகத்தினருக்கும் உரிய அங்கீகாரத்தை அளித்து வருகிறது. சிறிய கட்சிகளை ஒருபோதும் புறக்கணித்தது கிடையாது. பிகாா், அஸ்ஸாம், உத்தர பிரதேச மாநிலங்களில் நடைபெற்ற முந்தைய தோ்தல்களிலும் இதே நிலைப்பாட்டை பாஜக கடைப்பிடித்தது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com