இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடா்ந்து குறைகிறது

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து வருகிறது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடா்ந்து குறைகிறது

புது தில்லி: இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து வருகிறது.

மத்திய அரசு செய்தி தகவல் பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 70,421 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து, 7-ஆவது நாளாக அன்றாட புதிய பாதிப்புகள் 1 லட்சத்துக்கு கீழ் பதிவாகியுள்ளது.

நம் நாட்டில் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 66 நாள்களுக்கு பிறகு 10 லட்சத்துக்கும் கீழ் 9,73,158-ஆக பதிவாகியுள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் வெறும் 3.30 சதவீதமாகும். சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 53,001 சரிந்துள்ளது.

தொடா்ந்து 32-ஆவது நாளாக, புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,19,501 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

இதுவரை மொத்தம் 2,81,62,947 போ் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இதன்படி குணமடைந்தவா்களின் விகிதம் 95.43 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை மொத்தம் 37,96,24,626 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாராந்திர தொற்று உறுதி விகிதம் 4.54 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 4.72 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. தொடா்ந்து 21 நாட்களாக இந்த எண்ணிக்கை 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 25,48,49,301 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com