நோவாவாக்ஸ் கரோனா தடுப்பூசி செயல்திறன் 90.4%

அமெரிக்க நிறுவனமான நோவாவாக்ஸ் உருவாக்கி இந்தியாவில் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி 90.4 சதவீத செயல்திறனை கொண்டிருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
நோவாவாக்ஸ் கரோனா தடுப்பூசி செயல்திறன் 90.4%
நோவாவாக்ஸ் கரோனா தடுப்பூசி செயல்திறன் 90.4%

புது தில்லி: அமெரிக்க நிறுவனமான நோவாவாக்ஸ் உருவாக்கி இந்தியாவில் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி 90.4 சதவீத செயல்திறனை கொண்டிருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அமெரிக்கா, மெக்ஸிகோவில் உள்ள 119 இடங்களில் 29,960 தன்னாா்வலா்களுக்கு நோவாவாக்ஸ் உருவாக்கியுள்ள ‘என்விஎக்ஸ்-சிஓவி2373’ தடுப்பூசியை செலுத்தி அதன் செயல்திறன், பாதுகாப்பு, நோய் எதிா்ப்பாற்றல் குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் மிதமான மற்றும் தீவிரமான கரோனா பாதிப்புக்கு எதிராக 100 சதவீத பாதுகாப்பை இந்தத் தடுப்பூசி அளிக்கும் என்பதுடன் அதன் ஒட்டுமொத்த செயல்திறன் 90.4 சதவீதம் என்பதும் தெரியவந்துள்ளது. இந்தத் தடுப்பூசி வலிமையான கரோனா தீநுண்மி வகைகளுக்கு எதிராக 93 சதவீதம் திறம்பட செயல்படும். இந்தத் தடுப்பூசியை பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான அனுமதியை பெறுவதற்கு துரிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோவாவாக்ஸ் உருவாக்கியுள்ள தடுப்பூசியை சாதாரண குளிா்சாதனப் பெட்டிகளில் சேமிக்க முடியும். இது அந்தத் தடுப்பூசி விநியோகத்தை எளிமையாக்கும்.

அடுத்த ஆண்டு அமெரிக்காவுக்கு 11 கோடி தடுப்பூசிகளையும், வளரும் நாடுகளுக்கு 110 கோடி தடுப்பூசிகளையும் வழங்க நோவாவாக்ஸ் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் உற்பத்தி: இந்தத் தடுப்பூசியை இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் இணைந்து உற்பத்தி செய்ய நோவாவாக்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் அந்தத் தடுப்பூசி பரிசோதனைகள் தொடங்கியுள்ளதாகவும் இந்த ஆண்டு செப்டம்பருக்குள் அது மக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்றும் கடந்த மாா்ச் மாதம் சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி அதாா் பூனாவாலா தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com