இடைநீக்கம் செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் எம்எல்ஏ-க்கள் அகிலேஷுடன் சந்திப்பு

​உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 5 எம்எல்ஏ-க்கள் சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவை செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 5 எம்எல்ஏ-க்கள் சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவை செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.

இந்த சந்திப்பு குறித்து எம்எல்ஏ சுஷ்மா படேல் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசியது:

"சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவுடனான சந்திப்பு 15-20 நிமிடங்கள் நடைபெற்றது. வரவிருக்கும் உத்தரப் பிரதேச தேர்தல் குறித்து ஆலோசனை நடைபெற்றது. இது நல்ல சந்திப்பாக அமைந்தது."

தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியதற்கு "தனிப்பட்ட முறையில் நான் சமாஜவாதியில் இணைய முடிவு செய்துள்ளேன்" என்றார் சுஷ்மா படேல்.

இதையடுத்து,  அகிலேஷ் யாதவை சந்திப்பதற்கான காரணம் குறித்து கேட்கப்பட்டது. 

அதற்கு அவர் பதிலளித்தது:

"நாங்கள் அக்டோபர் 2020-இல் மாநிலங்களவைத் தேர்தலின்போது இடைநீக்கம் செய்யப்பட்டோம். பகுஜன் சமாஜ் கொடி, பதாகைகளைப் பயன்படுத்தக் கூடாது என்றும் எந்தக் கூட்டத்தில் பங்கெடுக்கக் கூடாது என்றும் தெரிவித்தனர். மாநிலங்களவைத் தேர்தலின்போது பகுஜன் சமாஜ் எந்த உத்தரவையும் போடவில்லை. நாங்களும் கட்சி மாறி வாக்களிக்கவில்லை. எந்த அடிப்படையும் இல்லாமல் நாங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டோம்.

தற்போது நாங்கள் மாற்று குறித்து யோசிக்க வேண்டும். இதனடிப்படையில் அகிலேஷ் யாதவ் சந்திப்பு நடைபெற்றது" என்றார் சுஷ்மா.

சுஷ்மா படேல் தவிர்த்து முகமது அஸ்லாம், ஹகிம்லால் பிந்த், முஸ்தப்பா சித்திக் மற்றும் ஹர்கோவிந்த் பார்கவ் ஆகியோரும் அகிலேஷ் யாதவைச் சந்தித்தனர். 

கடந்தாண்டு அக்டோபரில் மாநிலங்களவைத் தேர்தலில் கட்சி அதிகாரப்பூர்வமாக நிறுத்திய வேட்பாளர் ராம்ஜி கௌதமுக்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, 7 எம்எல்ஏ-க்களை கட்சியிலிருந்து நீக்கினார் கட்சித் தலைவர் மாயாவதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com