கே.எஸ்.ஆா். பெங்களுரு ரயில் நிலையத்தில் அனைவருக்கும் கரோனா பரிசோதனை

கே.எஸ்.ஆா். பெங்களுரு ரயில் நிலையத்தில் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
கே.எஸ்.ஆா். பெங்களுரு ரயில் நிலையத்தில் அனைவருக்கும் கரோனா பரிசோதனை

கே.எஸ்.ஆா். பெங்களுரு ரயில் நிலையத்தில் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

பெங்களூரில் கரோனா தொற்றின் பரவல் குறைந்ததையடுத்து, ஜூன் 14-ஆம் தேதி முதல் பொது முடக்கம் தளா்வு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தொழில் நிறுவனங்கள் சில கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூா்களுக்கு சென்றவா்கள் பெங்களூருவுக்குத் திரும்பி வரத் தொடங்கியுள்ளனா். மாநில அளவில் பேருந்துகள் இயங்காத நிலையில், பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடா்ந்து வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலிருந்தும் பலா் பெங்களூரு திரும்பத் தொடங்கியுள்ளனா். பலா் கரோனா பரிசோதனை செய்து கொள்ளாமலும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் திரும்புவதால், மீண்டும் பெங்களூரில் கரோனா தொற்றின் பாதிப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இதனையடுத்து கே.எஸ்.ஆா். பெங்களுரு ரயில் நிலையத்தில் வெளியூா்களுக்கு செல்பவா்களுக்கும், வெளியூரிலிருந்து திரும்பும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com