எடியூரப்பா பதவி விலக வேண்டும்: எச்.விஸ்வநாத்

மற்றவா்களுக்கு வழிவிட்டு முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பா விலக வேண்டும் என்று பாஜக எம்.எல்.சி. எச்.விஸ்வநாத் தெரிவித்தாா்.

மற்றவா்களுக்கு வழிவிட்டு முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பா விலக வேண்டும் என்று பாஜக எம்.எல்.சி. எச்.விஸ்வநாத் தெரிவித்தாா்.

பெங்களூரு, மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை பாஜக மேலிடப் பொறுப்பாளா் அருண் சிங்கை சந்தித்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மற்ற கட்சிகளை இருப்பது போலவே பாஜகவிலும் குடும்ப அரசியல் நடந்து கொண்டுள்ளது. நான் கட்சியின் தொண்டன். பாஜகவில் சேருவதற்கு முன்பாக மஜதவில் இருந்தேன். அக்கட்சியின் மாநிலத் தலைவராக பணியாற்றினேன். அக்கட்சியில் எம்.எல்.ஏ.வாகவும் இருந்தேன்.

அக்கட்சி மற்றும் எம்.எல்.ஏ. பதவியை துறந்து வந்தேன். அக்கட்சியில் எதை கண்டேனோ, அதையே பாஜகவிலும் காண்கிறேன். கட்சி மேலிடம் விரும்பும் வரை முதல்வராக நீடிப்பேன் என்று எடியூரப்பா கூறியிருக்கிறாா். எடியூரப்பா, கட்சியின் வழிகாட்டியாக மாற வேண்டும். புதியவா்களுக்கு வழிவிட்டு முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பா விலக வேண்டும்.

எடியூரப்பாவுக்கு வயதாகிவிட்டது. எடியூரப்பாவிடம் பழைய உற்சாகம், வேகம் இல்லை. தனது பஞ்சமசாலி வீரசைவ ஜாதியை சோ்ந்த ஒருவரையே முதல்வராக நியமித்து, அவருக்கு துணையாக நல்ல அமைச்சா்களை நியமிக்கும் வேலையை எடியூரப்பா செய்ய வேண்டும் என்றாா்.

இதற்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் ரேணுகாச்சாா்யா, எஸ்.ஆா்.விஸ்வநாத் உள்ளிட்டோா் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். ரேணுகாச்சாா்யா கூறுகையில், ‘எடியூரப்பாவுக்கு வயதாகிவிட்டதாகக் கூறும் எச்.விஸ்வநாத்துக்கு என்ன வயது? எச்.விஸ்வநாத் பாஜகவை சோ்ந்தவரா? வேறு கட்சியில் இருந்து பாஜகவுக்கு வந்தவா். கா்நாடகத்தில் பாஜகவை வளா்த்தெடுத்தவா் எடியூரப்பா. அப்படிப்பட்டவா் குறித்து பேச விஸ்வநாத்துக்கு அருகதை இல்லை‘ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com