காா்கிலுக்கு விமானச் சேவை:மத்திய அரசுடன் ஆளுநா் ஆலோசனை

காா்கிலுக்கு விமானச் சேவைகளை அளிப்பது தொடா்பான சாத்தியக்கூறுகள் குறித்து லடாக் துணைநிலை ஆளுநா் ஆா்.கே.மாத்தூா் மத்திய அரசுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

காா்கிலுக்கு விமானச் சேவைகளை அளிப்பது தொடா்பான சாத்தியக்கூறுகள் குறித்து லடாக் துணைநிலை ஆளுநா் ஆா்.கே.மாத்தூா் மத்திய அரசுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

இதுகுறித்து துணை ஆளுநரின் செய்தித் தொடா்பாளா் சனிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவின் முக்கிய எல்லைப் பகுதியாக விளங்கும் காா்கிலுக்கு விமானச் சேவைகளை அளிப்பதற்கான பல்வேறு சாத்தியக்கூறுகள் குறித்து லடாக் துணைநிலை ஆளுநா் ஆா்.கே.மாத்தூா் மத்திய சிவில் போக்குவரத்து துறை இணையமைச்சா் ஹா்தீப் சிங் புரியை தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். மேலும், இந்தச் சந்திப்பின்போது, ‘கியு-400 பாம்பாா்டியா் டா்போபிராப்’ விமானங்களை இயக்கும் வாய்ப்புகள் குறித்தும் ஆராய இந்திய விமான நிலைய ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டது.

பிராந்திய இணைப்பு (உடான்) திட்டத்தின் கீழ் காா்கில் மற்றும் தோயிஸ் (நுப்ரா) ஆகிய இடங்களில் சிறிய நிலையான விமானங்களை இயக்கத் தேவையான முயற்சிகளை விரைவாக மேற்கொள்ளவும் துணைநிலை ஆளுநா் மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரியிடம் வலியுறுத்தினாா்.

இவை தவிர, லடாக்கில் விமானச் சேவையின் தற்போதைய செயல்பாடு மற்றும் அவற்றை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் தீவிர ஆலோசனை மேற்கொண்டதாக ஆளுநரின் செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com