தில்லி மெட்ரோ ரயிலில் பயணித்த குரங்கு: மெட்ரோ நிர்வாகம் விளக்கம்

தில்லி மெட்ரோ ரயிலின் நீல நிறப் பாதையில், மெட்ரோ ரயிலுக்குள் ஒரு குரங்கு பயணித்த விடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து அது பற்றி மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
தில்லி மெட்ரோ ரயிலில் பயணித்த குரங்கு: மெட்ரோ நிர்வாகம் விளக்கம் (கோப்பிலிருந்து)
தில்லி மெட்ரோ ரயிலில் பயணித்த குரங்கு: மெட்ரோ நிர்வாகம் விளக்கம் (கோப்பிலிருந்து)


புது தில்லி: தில்லி மெட்ரோ ரயிலின் நீல நிறப் பாதையில், மெட்ரோ ரயிலுக்குள் ஒரு குரங்கு பயணித்த விடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து அது பற்றி மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

அக்சர்தாம் மெட்ரோ ரயில் நிலையத்தில், மெட்ரோ ரயிலுக்குள் புகுந்த குரங்கு பற்றி ரயில் நிலைய ஊழியர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும், அடுத்த ரயில் நிலையத்தில் குரங்கு வெளியேற்றப்பட்டது என்று விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், குரங்கு போன்ற விலங்குகளுக்கு மெட்ரோ ரயில் பயணிகள் உணவளிப்பது போன்ற எதையும் செய்ய வேண்டாம் என்றும், அது சில வேளையில் ரயில் பயணிகளுக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com