மகாராஷ்டிரத்தில் கருப்புப் பூஞ்சைக்கு 729 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் கருப்புப் பூஞ்சைக்கு 729 பேர் பலியாகியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை திங்கள்கிழமை தெரிவித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


மகாராஷ்டிரத்தில் கருப்புப் பூஞ்சைக்கு 729 பேர் பலியாகியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை திங்கள்கிழமை தெரிவித்தது.

கரோனா 2-ம் அலையில் நோய்த் தொற்றிலிருந்து மீண்டவர்களை கருப்புப் பூஞ்சை பாதிக்கிறது. முதல் அலையில் இல்லாத கருப்புப் பூஞ்சை, 2-ம் அலையில் அதிகளவில் பாதிப்பை உண்டாக்குகிறது.

ஜூன் 19 காலை 11 மணி வரையிலான கருப்புப் பூஞ்சை பாதிப்பு நிலவரத்தை மகாராஷ்டிர சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அந்த மாநிலத்தில் மொத்தம் 7,998 பேர் கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 729 பேர் பலியாகியுள்ளனர்.

4,398 பேர் கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டு இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மகாராஷ்டிரத்திலேயே அதிகபட்சமாக நாக்பூர் மாவட்டத்தில் 104 பேரும், புணேவில் 90 பேரும், ஔரங்காபாத்தில் 75 பேரும் கருப்புப் பூஞ்சைக்கு உயிரிழந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com