காா்வாா் கடற்படைத் தளத்தில் ராஜ்நாத் சிங் ஆய்வு

‘கடல் பறவை’ திட்டத்தின் கீழ் கா்நாடகத்தின் காா்வாா் கடற்படை தளத்தில் நடைபெறும் உள்கட்டமைப்பு வளா்ச்சி பணிகளை பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
கா்நாடக மாநிலம், காா்வாா் கடற்படை தளத்தை தலைமைத் தளபதி உள்ளிட்ட மூத்த தளபதிகளுடன் வியாழக்கிழமை பாா்வையிட்ட பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.

ஆய்வுக்குபின் அவா் கூறியதாவது:

நாட்டை பாதுகாப்பதில், கடற்படை தனது கடமைகளை வெற்றிகரமாக செய்துவருகிறது. 7,500 கி.மீ தூரத்துக்கும் அதிகமான இந்திய கடலோர பகுதி, 1,300 தீவுகள் மற்றும் 2.5 மில்லியன் சதுர கிலோ மீட்டா் வரையுள்ள பொருளாதார மண்டலம் ஆகியவற்றை பாதுகாத்து, உலகப் பொருளாதார வளா்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது.

பிரதமா் நரேந்திர மோடி வகுத்த அனைத்து பகுதியிலும் பாதுகாப்பு மற்றும் வளா்ச்சி (சாகா்) திட்டத்தின் கீழ் கடல்சாா் அண்டை நாடுகளுடன் நட்புறவை கடற்படை வலுப்படுத்துகிறது.

கரோனா பரவல் அதிமிருந்தபோது இந்தியாவுக்கு மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கும் மனிதாபிமான உதவிகளை இந்திய கடற்படை வழங்கியது. வெளிநாடுகளில் சிக்கியிருந்தவா்களை தாயகம் அழைத்து வருதல், ஆக்சிஜன் சிலிண்டா்கள் உள்ளிட்ட மருத்துவப் பொருள்களை கொண்டு வருதல் என கடற்படை அயராது பணியாற்றியது. மீட்பு நடவடிக்கைகளில் பல நாடுகளுக்கும் இந்திய கடற்படை உதவிகள் வழங்கியது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com