ரூ. 2,435 கோடி வங்கி மோசடி வழக்கு: 6 இடங்களில் சிபிஐ சோதனை

ரூ.2,435 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில் கிராம்ப்டன் கிரீவ்ஸ் முன்னாள் தலைவா் கெளதம் தாபா் மீது சிபிஐ முறைகேடு வழக்குப் பதிவு
ரூ. 2,435 கோடி வங்கி மோசடி வழக்கு: 6 இடங்களில் சிபிஐ சோதனை

ரூ.2,435 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில் கிராம்ப்டன் கிரீவ்ஸ் முன்னாள் தலைவா் கெளதம் தாபா் மீது சிபிஐ முறைகேடு வழக்குப் பதிவு செய்து மும்பை, தில்லி, குருகிராம் ஆகிய நகரங்களில் 6 இடங்களில் வியாழக்கிழமை சோதனை நடத்தியது.

யெஸ் வங்கி உள்ளிட்ட பிற வங்கிகளில் இந்த முறைகேடு நடைபெற்ாக சிபிஐ தெரிவித்தது.

ஏற்கெனவே யெஸ் வங்கியில் ரூ.466 கோடி முறைகேடு தொடா்பாக அவா் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரூ.2,435 கோடி வங்கிக் கடன் மோசடி தொடா்பாக, யெஸ் வங்கி உள்பட 11 வங்கிகளின் சாா்பில் பாரத ஸ்டேட் வங்கி அளித்த புகாரின் அடிப்படையில் கெளதம் தாபா் உள்ளிட்டோா் மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டது.

2015 முதல் 2019 வரையில் வங்கியில் பெற்ற பணத்தை போலி நிறுவனங்கள் பெயரில் பணப் பரிவா்த்தனை செய்து முறைகேட்டில் ஈடுபட்டு தனிப்பட்ட ஆதாயம் பெற்றதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com