கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி பாதுகாப்பானவை: மத்திய சுகாதாரத்துறை

கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி பாதுகாப்பானவை என மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி பாதுகாப்பானவை: மத்திய சுகாதாரத்துறை

கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி பாதுகாப்பானவை என மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

அமைச்சகம் சார்பாக செவ்வாய்க்கிழமை மாலை செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது மத்திய சுகாதாரத் துறை அதிகாரி வி.கே.பால் கூறுகையில்,

இந்தியாவில் டெல்டா பிளஸ் வகை கரோனாவால் இதுவரை 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச அளவில் உருவாக்கப்பட்ட முதல் தடுப்பூசியான மாடர்னாவுக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாடு அமைப்பு முதல் கட்ட சோதனைக்கு அனுமதி அளித்துள்ளது. இந்த தடுப்பூசி இரண்டு தவணையாக செலுத்தப்படும்.

இந்தியாவில் தற்போது உள்ள 4 தடுப்பூசிகளும் கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானவை. மேலும், இதுகுறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றது. விரைவில் கர்ப்பிணி பெண்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்.

இந்த நான்கு தடுப்பூசிகளும் (கோவேக்சின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக்-வி மற்றும் மாடர்னா) பாலூட்டும் தாய்மார்களுக்கு பாதுகாப்பானவை. தடுப்பூசிக்கும், சோர்வு ஏற்படுவதற்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com