பஞ்சாபில் நம்பிக்கையை இழந்தது காங்கிரஸ்: சிசோடியா

பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக ஆம் ஆத்மி தலைவரும் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா விமர்சித்துள்ளார்.
மணீஷ் சிசோடியா (கோப்புப் படம்)
மணீஷ் சிசோடியா (கோப்புப் படம்)

பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக ஆம் ஆத்மி தலைவரும் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா விமர்சித்துள்ளார். 

பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியினர் பஞ்சாபில் முகாமிட்டுள்ளனர். 

முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நேற்று பஞ்சாபில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். 

இந்நிலையில், பஞ்சாப் தேர்தல் குறித்து தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பேசியதாவது, 

பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி மக்களின் நம்பிக்கையை பெறத் தவறிவிட்டது. மக்களிடம் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை இழந்துள்ளது. 

எனவே காங்கிரஸ் அமைப்பது இனி மக்களுக்கு பொருந்தாத அரசாகவே இருக்கும் என்று கூறினார்.

பஞ்சாபில் அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

2017- சட்டப்பேரவைத் தேர்தல்:

2017 பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் காங்கிரஸ் 77 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. ஆம் ஆத்மி 20 இடங்களில் வென்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. முன்பு ஆட்சியிலிருந்த சிரோமணி அகாலி தளம் 15 இடங்களிலும் பாஜக 3 இடங்களிலும் மட்டுமே வென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com