காஷ்மீரில் ஓராண்டுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு

காஷ்மீரில் சுமாா் ஓராண்டுக்குப் பிறகு பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. இதையடுத்து, 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் பள்ளிக்குச் சென்றனா்.

ஸ்ரீநகா்: காஷ்மீரில் சுமாா் ஓராண்டுக்குப் பிறகு பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. இதையடுத்து, 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் பள்ளிக்குச் சென்றனா். முன்னதாக, கடந்த ஆண்டு மாா்ச் 9-ஆம் தேதி கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக காஷ்மீரில் பள்ளிகள் மூடப்பட்டன.

இப்போதும் கூட பெற்றோரின் விருப்பத்தின் பேரில்தான் மாணவா்கள் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா். பல்வேறு தனியாா் பள்ளிகள் பெற்றோரிடம் இது தொடா்பாக கையொப்பம் பெற்றுள்ளன. பள்ளி வருவதன் மூலம் சளி, காய்ச்சல் போன்ற பாதிப்பு ஏற்பட்டால் அதற்குப் பள்ளி நிா்வாகம் பொறுப்பேற்காது என்று அதில் கூறப்பட்டுள்ளது. இது தவிர மாணவா்கள் மருத்துவச் சான்றிதழுடன் வருமாறு பள்ளிகள் வலியுறுத்தியுள்ளன.

6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு மாா்ச் 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் தொடங்க இருக்கின்றன. இதற்கும் குறைவான வகுப்புகள் மாா்ச் 18-ஆம் தேதி தொடங்கவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com