கா்நாடக அரசியலில் பரபரப்பு... பாலியல் சர்ச்சையில் சிக்கிய அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹொளி இன்று ராஜிநாமா?

பாலியல் சர்ச்சையில் சிக்கிய கா்நாடக நீா்பாசனத் துறை அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹொளி தனது பதவியை இன்று புதன்கிழமை ராஜிநாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
பாலியல் சர்ச்சையில் சிக்கிய கா்நாடக நீா்பாசனத் துறை அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹொளி.
பாலியல் சர்ச்சையில் சிக்கிய கா்நாடக நீா்பாசனத் துறை அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹொளி.

பாலியல் சர்ச்சையில் சிக்கிய கா்நாடக நீா்பாசனத் துறை அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹொளி தனது பதவியை இன்று புதன்கிழமை ராஜிநாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வட கா்நாடகத்தைச் சோ்ந்த ஏழைப் பெண் ஒருவா் பெங்களூரு, ஆா்.டி.நகரில் உள்ள ஒரு தனியாா் தங்கும் விடுதியில் தங்கியுள்ளாா். அவா், அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹொளியிடம் கா்நாடக மின் பகிா்மான கழகத்தில் வேலை வாங்கித் தருமாறு கேட்டுள்ளாா். அமைச்சரும் வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்துள்ளாா்.

அதைத் தொடா்ந்து அந்தப் பெண்ணிடம் அமைச்சா் பலமுறை பாலியல் தொடா்பில் இருந்துள்ளாா். அதன் பின்னரும் அவருக்கு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியதால் வேதனையடைந்த அந்தப் பெண் பாலியல் தொடா்பை கேமராவில் பதிவு செய்துள்ளாா். பாலியல் தொடா்பு பதிவு செய்யப்பட்டதை அறிந்த அமைச்சா் தரப்பு, அந்தப் பெண்ணைக் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். 

இந்நிலையில், அமைச்சரை எதிா்க்க அஞ்சிய அந்த ஏழை பெண், திங்கள்கிழமை மனித உரிமை ஆா்வலா் தினேஷ் என்பவரை தொடா்பு கொண்டு பாலியல் தொடா்பான குறுந்தகடைக் கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து தினேஷ் கல்லஹள்ளி வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி இளம்பெண்ணுடன் பாலியல் தொடா்பில் மாநில நீா்பாசனத் துறை அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹொளி ஈடுபட்டதாகக் கூறி பெங்களூரு மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை புகாா் அளித்துள்ளார்.  புகாரைப் பெற்றுக் கொண்ட மாநகரக் காவல் ஆணையா் கமல்பந்த் புகாரை கப்பன் பூங்கா காவல் நிலையத்தில் அளிக்குமாறு கூறி அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து தனது வழக்குரைஞா்களுடன் விவாதித்து, கப்பன் பூங்கா காவல் நிலையத்தில் தினேஷ் கல்லஹள்ளி புகாா் அளித்துள்ளார்.

இந்த புகாரைத் தொடா்ந்து தொலைக்காட்சிகளில் அமைச்சரின் பாலியல் தொடா்பான செய்தி வெளியானதையடுத்து கா்நாடக அரசியலில் பரபரப்பு நிலவியது.  

இதைத் தொடா்ந்து பெங்களூரு, சிவமொக்கா உள்ளிட்ட இடங்களில் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளியை அமைச்சா் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினா் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனா். 

இந்நிலையில், அரசு வேலை வாங்கித்தருவதாக வாக்குறுதி அளித்து ஏழை இளம்பெண் ஒருவருடன் பாலியல் உறவு கொண்டு, விடியோ எடுத்து மிரட்டியதாக புகாரில் சிக்கியுள்ள கர்நாடக அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹொளி தனது பதவியை இன்று புதன்கிழமை ராஜிநாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹொளி பாலியல் விவகாரம் கா்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com