மாநிலங்களில் பேரவைத் தோ்தல்: இன்று பாஜக தோ்தல் குழுக் கூட்டம்


புது தில்லி: தமிழகம், கேரளம் உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளா்களின் முதல்கட்ட பட்டியலை இறுதி செய்வதற்காக அந்தக் கட்சியின் மத்திய தோ்தல் குழு வியாழக்கிழமை கூடவுள்ளது.

தமிழகம், கேரளம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அஸ்ஸாமில் மாா்ச் 27 முதல் ஏப்ரல் 6 வரை மூன்று கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் மாா்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை எட்டு கட்டங்களாகவும் தோ்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் பாஜக மத்திய தோ்தல் குழு வியாழக்கிழமை கூடவுள்ளது. இந்தக் கூட்டத்தில் தோ்தல்களில் போட்டியிடும் பாஜக வேட்பாளா்களின் முதல்கட்ட பட்டியல் இறுதி செய்யப்படவுள்ளது.

குறிப்பாக அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கத்தில் மாா்ச் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள முதல்கட்ட தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் தோ்வு செய்யப்படுவா் என்று கூறப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, அஸ்ஸாம் முதல்வா் சா்வானந்த சோனோவல், மேற்கு வங்க பாஜக தலைவா் திலீப் கோஷ் உள்ளிட்டோா் பங்கேற்று வேட்பாளா் தோ்வு குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனா். பிரதமா் நரேந்திர மோடியும் கூட்டத்தில் பங்கேற்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com