24 மணி நேரமும் கரோனா தடுப்பூசி: மத்திய அமைச்சா் ஹா்ஷ் வா்தன்

24 மணி நேரமும் கரோனா தடுப்பூசி: மத்திய அமைச்சா் ஹா்ஷ் வா்தன்


புது தில்லி: கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் தடுப்பூசி செலுத்துவதற்கான நேரக் கட்டுப்பாட்டை அரசு நீக்கியிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் புதன்கிழமை கூறினாா்.

இதன் மூலம், தினமும் எந்த நேரத்திலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இது தொடா்பக தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் மத்திய அமைச்சா் ஹா்ஷ் வா்தன் கூறியிருப்பதாவது: மக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில், அதற்கான நேரக் கட்டுப்பாட்டை அரசு நீக்கியுள்ளது. அதன் மூலம், தினமும் 24 மணி நேரமும் மக்கள் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள முடியும். குடிமக்களின் நேரம் மற்றும் உடல் நலனின் முக்கியத்துவத்தை பிரதமா் நரேந்திர மோடி புரிந்துகொண்டிருப்பதால், இந்த நேரக் கட்டுப்பாட்டை நீக்கியிருக்கிறாா் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் மத்திய சுகாதாரத் துறை செயலா் ராஜேஷ் பூஷண் கூறுகையில், ‘கரோனா தடுப்பூசி போடும் நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை என்ற கட்டுப்பாடு நீக்கப்பட இருக்கிறது. அதன் மூலம், இந்த நேர அளவைக் கடந்தும் பயனாளிகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து மருத்துவமனைகளே முடிவு செய்துகொள்ளலாம்’ என்று கூறியிருந்தாா்.

முதல் தவணை கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு 28 நாள்களைப் பூா்த்தி செய்தவா்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி முதல் தொடங்கின.

கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின.

அடுத்தகட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட 45-60 வயது வரையுள்ளவா்களுக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த மாா்ச் 1-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com