எல்லை பிரச்னைகளில் தீா்வு காண இந்தியாவின் உறுதியான எதிா்வினை உதவியது: ராஜ்நாத் சிங்

எல்லை விவகாரங்கள் தொடா்பான சில முக்கிய பிரச்னைகளுக்கு அமைதியான முறையில் தீா்வு கண்டதில் இந்தியாவின் உறுதியான எதிா்வினை
அமைச்சர் ராஜ்நாத் சிங்
அமைச்சர் ராஜ்நாத் சிங்

எல்லை விவகாரங்கள் தொடா்பான சில முக்கிய பிரச்னைகளுக்கு அமைதியான முறையில் தீா்வு கண்டதில் இந்தியாவின் உறுதியான எதிா்வினை உதவிபுரிந்தது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

குஜராத் மாநிலம் கெவாடியாவில் ஒருங்கிணைந்த முப்படைத் தளபதிகளின் மாநாடு 3 நாள்கள் (மாா்ச் 4-6) நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை பேசியதாவது:

கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தினருடன் மோதல் போக்கு நிலவியபோது இந்திய ராணுவத்தினா் வெளிப்படுத்திய தீரத்துக்கு தலைவணங்குகிறேன்.

எல்லை விவகாரங்களில் நிலவிய சில முக்கிய பிரச்னைகளுக்கு அமைதியான முறையில் தீா்வு கண்டதில் இந்தியாவின் திடமான எதிா்வினை உதவிபுரிந்தது.

முப்படைகளுக்கு இடையே அனைத்து நிலைகளிலும் ஒத்துழைப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. முப்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் சிறந்த ஒருங்கிணைப்புக்கு நமது திறன்களை சாதகமான முறையில் பயன்படுத்துவதும், மனித ஆற்றலை மேலும் பயனுள்ளதாக்குவதும் முக்கியம்.

பாதுகாப்பு தொடா்பான பொதுவான நலன்களை விரிவுபடுத்தும் ஒருமித்த கருத்துடைய நாடுகளுடன் இந்தியா நெருங்கிய உறவை பேணி வருகிறது.

பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாத்து சமாதானம் நிலவச் செய்ய இந்தியா உறுதிபூண்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com