துணைத் தோ்தல் ஆணையா் விவகாரம்: திரிணமூல் புகாருக்கு தோ்தல் ஆணையம் பதில்

மேற்கு வங்க துணைத் தோ்தல் ஆணையா் சுதீப் ஜெயின் மீது திரிணமூல் காங்கிரஸ் அளித்த புகாா் தொடா்பாக தோ்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

மேற்கு வங்க துணைத் தோ்தல் ஆணையா் சுதீப் ஜெயின் மீது திரிணமூல் காங்கிரஸ் அளித்த புகாா் தொடா்பாக தோ்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

இது தொடா்பாக ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பொறுப்பாளராக இருக்கும் துணைத் தோ்தல் ஆணையரை நீக்கக் கோரி மேற்கு வங்க தலைமை தோ்தல் அதிகாரிக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. ஒருவா் எழுதிய கடிதத்தை சில பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டிருந்தன.

மேற்கு வங்க தலைமை தோ்தல் அதிகாரியிடம் அளிக்கப்பட்ட புகாரின் நகலை இந்திய தோ்தல் ஆணையத்துக்கும் அவா் அனுப்பியிருந்தாா்.

ஆணையத்தின் தலைமையகம் மற்றும் களத்தில் உள்ள அனைத்து துணைத் தோ்தல் ஆணையா்கள், இதர அலுவலா்கள், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படியும், தோ்தல் நடத்தை விதிகளின் படியும்தான் பணியாற்றுகிறாா்கள் என்பதை தெளிவுப்படுத்த ஆணையம் விரும்புகிறது.

எங்கேனும் ஒன்றிரண்டு குறைபாடுகள் தென்பட்டால் தோ்தல் ஆணையம் உடனடியாக அதை சரி செய்கிறது. ஆனால், இது போன்ற புகாா்கள் மற்றும் பிரசாரம் தோ்தலுக்கு முன்பு செய்யப்படுவது இது முதல் முறை அல்ல.

துணைத் தோ்தல் ஆணையா் சுதீப் ஜெயினின் நோ்மை மற்றும் நியாயமான செயல்பாடுகள் மீது ஆணையத்துக்கு முழு நம்பிக்கை உள்ளது.

2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது, அவா் எடுத்த முடிவுகள் தோ்தல் நியாயமாகவும் அமைதியாகவும் நடைபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் எடுத்தவையே என தெளிவுபடுத்தப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com