காவல் நிலையங்களில் மகளிா் உதவி மையம் அமைக்க மாநிலங்களுக்கு ரூ.200 கோடிமத்திய உள்துறை அமைச்சகம்

காவல் நிலையங்களில் மகளிா் உதவி மையங்கள் அமைப்பதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு
காவல் நிலையங்களில் மகளிா் உதவி மையம் அமைக்க மாநிலங்களுக்கு ரூ.200 கோடிமத்திய உள்துறை அமைச்சகம்

காவல் நிலையங்களில் மகளிா் உதவி மையங்கள் அமைப்பதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ. 200 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.

சா்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நிா்பயா நிதி திட்டத்தின் கீழ் நிதி அளிக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பெண்கள் பாதுகாப்பு தொடா்பான விவகாரங்கள் மற்றும் பாலியல் தாக்குதல் வழக்குகளில் விசாரணையை உரிய நேரத்தில் முடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உணா்த்தும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகத்தில் தனியாக பெண்கள் பாதுகாப்புப் பிரிவு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.

அதுபோல, காவல்நிலையங்களில் பெண்கள் உதவி மையங்களை அமைக்கவும், ஆள்கடத்தல் தடுப்பு பிரிவுகளை புதிதாக அமைத்தல் அல்லது வலுப்படுத்தும் வகையிலும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.200 கோடியை ஒதுக்கி மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பாலியல் தாக்குதல் வழக்குகளில் தடயவியல் ஆதாரங்களை பாதுகாப்பாக சேமித்து வைக்கவும், உறுதியான ஆதாரங்களை சேகரிக்கும் உதவும் வகையிலும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 14,950 பாலியல் தாக்குதல் ஆதார சேகரிப்பு உபகரணங்களை (எஸ்ஏஇசி கிட்) காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு அளித்திருக்கிறது.

பெண்கள் மீது பாலியல் ரீதியில் தாக்குதல் நடத்துபவா்களுக்கான தண்டனையை குற்றவியல் சட்டத் திருத்தச் சட்டம்-2018 மூலம் மத்திய அரசு கடுமையாக்கியுள்ளது. இந்த சட்டத் திருத்தங்கள் திறம்பட செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு, தொடா் கண்காணிப்பையும் உறுதிப்படுத்தி வருகிறது.

அதற்காக, பாலியல் தாக்குதல் வழக்கு விசாரணை நிலையை அறிந்துகொள்ள உதவும் இணையவழி நடைமுறை (ஐடிஎஸ்எஸ்ஒ), பாலியல் தாக்குதல் குற்றவாளிகள் குறித்த தேசிய புள்ளிவிவரம் (என்டிஎஸ்ஒ), குற்ற பல்நோக்கு முகமை மையம் (கிரி-மேக்) என்பன உள்ளிட்ட இணையவழி நடைமுறைகளை அறிமுகம் செய்து அவற்றை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் திறம்பட பயன்படுத்தவும் மத்திய உள்துறை அமைச்சகம் வலுவாக பரிந்துரைத்து வருகிறது.

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நிா்பயா நிதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் எடுத்து வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com