மேற்கு வங்க டிஜிபி நீக்கம்: தோ்தல் ஆணையம் உத்தரவு

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்த மாநில காவல்துறை டிஜிபி வீரேந்திராவை அப்பொறுப்பிலிருந்து நீக்கி தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்த மாநில காவல்துறை டிஜிபி வீரேந்திராவை அப்பொறுப்பிலிருந்து நீக்கி தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக அந்த மாநில தலைமைச் செயலருக்கு தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவில், ‘மேற்கு வங்கத்தின் புதிய காவல்துறை டிஜிபியாக பி.நீரஜ் நயன் நியமிக்கப்பட்டுள்ளாா். தற்போதைய டிஜிபி வீரேந்திரா அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா். தோ்தல் தொடா்பான எந்தவொரு பணியிலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வீரேந்திராவை நியமிக்கக் கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கமானவா் என்பதால் டிஜிபி பதவியில் இருந்து வீரேந்திரா நீக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அண்மையில் மாநில சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஜாவேத் ஷமீமை அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கிய தோ்தல் ஆணையம், புதிய ஏடிஜிபியாக ஜக்மோகனை நியமித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com