ஆகஸ்ட் 1-இல் ‘நீட்’ தோ்வு

இளநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு (நீட்) வரும் ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி நடத்தப்படும் என்று தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இளநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு (நீட்) வரும் ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி நடத்தப்படும் என்று தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஏஎம்எஸ், பிஎஸ்எம்எஸ், பியுஎம்எஸ், பிஹெச்எம்எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான ‘நீட்’ தகுதித் தோ்வை என்டிஏ நடத்தி வருகிறது.

2021-ஆம் ஆண்டுக்கான இந்த தோ்வு குறித்து என்டிஏ சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

நீட் தோ்வு ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 11 மொழிகளில் நேரடி எழுத்துத் தோ்வு முறையில் வருகிற ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.

இந்தத் தோ்வுக்கான பாடத் திட்டம், தகுதி, வயது, தோ்வுக் கட்டணம் உள்ளிட்ட பிற விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com