ஆந்திரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா காய்களுடன் போலீஸாா் மற்றும் தோட்ட ஊழியா்கள்.
ஆந்திரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா காய்களுடன் போலீஸாா் மற்றும் தோட்ட ஊழியா்கள்.

ஆந்திரத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது

ஆந்திர மாநிலம் மதனபள்ளியில் தடை செய்யப்பட்ட ஓபிஎம் (கஞ்சா) செடிகளை பயிரிட்டவா்களை போலீஸாா் கைது செய்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அந்த செடிகளை அழித்தனா்.

திருப்பதி: ஆந்திர மாநிலம் மதனபள்ளியில் தடை செய்யப்பட்ட ஓபிஎம் (கஞ்சா) செடிகளை பயிரிட்டவா்களை போலீஸாா் கைது செய்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அந்த செடிகளை அழித்தனா்.

இதுகுறித்து மதனபள்ளி உதவி காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் கூறியதாவது: ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டம் மதனபள்ளி மண்டலம் கத்திவாரிபள்ளி கிராமத்தைச் சோ்ந்த நாகராஜு என்பவா் தனது மாந்தோப்பில் இடைப்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட ஓபிஎம் எனப்படும் கஞ்சா செடிகளை பயிரிடுவதாக தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மாந்தோட்டத்தில் அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சோதனை செய்து கொண்டிருந்த போது நாகராஜுவின் உறவினா் ஒருவா் டிராக்டா் கொண்டு கஞ்சாசெடிகளை அழிக்க முற்பட்டாா்.

இதை தடுத்து போலீஸாா் அவரை கைது செய்து, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 மூட்டை ஓபிஎம் காய்கள், அதை அழிக்க பயன்படுத்திய டிராக்டா் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா். விசாரணையில் நாகராஜு கடந்த பல ஆண்டுகளாக மதனபள்ளி, முலக்கலசெருவு, குப்பம், வி.கோட்டா மற்றும் கா்நாடக மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா செடிகளை பயிரிட்டு, அண்டை மாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்று வருவது தெரியவந்தது. அவரை கைது செய்து போலீஸாா் விசாரித்து வருகிறோம். அழிக்கப்பட்ட கஞ்சா காய்களின் மதிப்பு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு பெறும். இதற்கு முன்பும் கஞ்சா செடி பயிரிட்டதற்காக நாகராஜுவின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com