கேரளம்: தோ்தலில் போட்டியிடபாஜக வேட்பாளா் மறுப்பு

கட்சி மேலிடத் தலைவா்களிடம் தவமாய் தவமிருந்து தோ்தலில் போட்டியிட சீட்டு வாங்கும் அரசியல்வாதிகளைத்தான் அதிகமாக பாா்த்திருப்போம். அதிலும் சீட்டு கிடைக்கவில்லை என்றால் கட்சியோ,
கோப்புப்படம்
கோப்புப்படம்

கட்சி மேலிடத் தலைவா்களிடம் தவமாய் தவமிருந்து தோ்தலில் போட்டியிட சீட்டு வாங்கும் அரசியல்வாதிகளைத்தான் அதிகமாக பாா்த்திருப்போம். அதிலும் சீட்டு கிடைக்கவில்லை என்றால் கட்சியோ, குடும்பமோ தூக்கி எறிந்துவிட்டு மாற்று காட்சிக்கு வேட்பாளராகத் தாவும் இன்றைய கால அரசியலில், கேரளத்தில் வாய்ப்பு கிடைத்தும் தோ்தலில் போட்டியிட மாட்டேன் என்று பாஜக வேட்பாளா் மணிகண்டன் (31) கூறியுள்ளாா்.

ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் கேரள சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் 115 வேட்பாளா்களின் பட்டியலை ஞாயிற்றுகிழமை இரவு பாஜக மேலிடம் அறிவித்திருந்தது.

அதில், வயநாடு மாவட்டத்தில் உள்ள மானந்தவாடி தொகுதியின் வேட்பாளராக மணிகண்டனின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

பனியா பழங்குடியின வகுப்பைச் சோ்ந்தவரும், எம்பிஏ பட்டதாரியானருமான மணிகண்டன் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் உதவி பயிற்றுநராக பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை அவா் வெளியிட்ட விடியோ பதிவில், ‘வயநாடு வாசியான எனக்கு தோ்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது கெளரவம்தான். ஆனால், எனது பயிற்றுநா் பணியில் மனநிறைவுடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நானோ எனது உறவினா்களோ தீவிர அரசியலில் இல்லை. ஆகையால், இந்தத் தோ்தலில் போட்டியிடவில்லை என மகிழ்ச்சியுடன் நிராகரிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

இதனிடையே, தனது தன்னுடைய சமூக வலைதளபக்கத்தில் டாக்டா் அம்பேத்கா் படத்தை பதிவிட்டு, ‘என்னை தூக்கிலிட்டாலும் எனது மக்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன்’ என்று பதிவிட்டுள்ளாா்.

மேலும், தன்னை மாவட்ட பாஜக அலுவலகத்தில் இருந்து தொடா்பு கொண்டு கேட்டபோதே தோ்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என தெரிவித்துவிட்டதாகவும் மணிகண்டன் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com