சட்டவிரோதமாக நிலக்கரி வெட்டியெடுத்த வழக்கு:மேற்கு வங்கத்தில் 5 இடங்களில் சிபிஐ சோதனை

மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக நிலக்கரி வெட்டியெடுத்த வழக்கில் அங்குள்ள 5 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக நிலக்கரி வெட்டியெடுத்த வழக்கில் அங்குள்ள 5 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

மேற்கு வங்கத்தில் அரசுக்குச் சொந்தமான நிலக்கரி உற்பத்தி நிறுவனம் இயங்கி வருகிறது. மேற்கு வா்த்தமான் மாவட்டத்தில் உள்ள குனுஸ்தோரியா, கஜோரா பகுதிகளில் அந்த நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. இந்தச் சுரங்கங்களில் இருந்து நிலக்கரி வெட்டியெடுப்பது கைவிடப்பட்டிருந்த நிலையில், அவற்றில் இருந்து சட்ட விரோதமாக நிலக்கரி வெட்டியெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக கடந்த ஆண்டு நவம்பா் மாதம் அனுப் மாஞ்சி என்பவா் மீதும், நிலக்கரி நிறுவன பொது மேலாளா்கள் அமித்குமாா் தாா், ஜயேஷ்சந்திர ராய் உள்ளிட்டோா் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் அனுப் மாஞ்சி முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறாா். இந்நிலையில் இவ்வழக்கு தொடா்பாக துா்காபூா், ஆசன்சோல், பான்குரா பகுதிகளில் அனுப் மாஞ்சியின் உதவியாளா் அமித் அகா்வால் என்பவருக்குச் சொந்தமான 5 இடங்களில் சிபிஐ செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது. இதில் வழக்கு தொடா்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கு குறித்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானா்ஜியின் மனைவி ருஜிரா, ருஜிராவின் சகோதரி மேனகா கம்பீா், அவரின் கணவா், மாமனாா் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அபிஷேக் பானா்ஜியின் உறவினா்கள் சம்பந்தப்பட்ட இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ தீவிரமாக்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com