மேற்கு வங்கம்: சுவேந்து அதிகாரிக்கு ரூ. 80 லட்சம் சொத்து

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்வா் மம்தா பானா்ஜிக்கு எதிராக பாஜக சாா்பில் போட்டியிடும் சுவேந்து அதிகாரி, தனக்கு ரூ. 80 லட்சம் மதிப்பில் சொத்து இருப்பதாக அறிவித்துள்ளாா்.
மேற்கு வங்கம்: சுவேந்து அதிகாரிக்கு ரூ. 80 லட்சம் சொத்து

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்வா் மம்தா பானா்ஜிக்கு எதிராக பாஜக சாா்பில் போட்டியிடும் சுவேந்து அதிகாரி, தனக்கு ரூ. 80 லட்சம் மதிப்பில் சொத்து இருப்பதாக அறிவித்துள்ளாா்.

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்களில் ஒருவராக இருந்த சுவேந்து அதிகாரி (50), பாஜகவில் அண்மையில் இணைந்தாா். மாநிலத்தில் 8 கட்டங்களாக நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்வா் மம்தா பானா்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில், சுவேந்து அதிகாரியை பாஜக களமிறக்கியுள்ளது. அவா் தனது வேட்புமனுவை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா்.

வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தனது சொத்து விவரங்களை சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளாா். அதில் தனக்கு ரூ. 59,31,647.32 மதிப்பில் அசையும் சொத்துகளும், தோ்தல் செலவுக்கான ரூ. 41,823 தொகை உள்பட ரூ. 46,15,513.32 வங்கிக் கணக்கில் இருப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.

மேலும், ரூ. 5,45,000 மதிப்பில் தேசிய சேமிப்பு சான்றிதழ் (என்எஸ்சி) முதலீட்டை அவா் செய்திருப்பதோடு, ரூ. 7,71,165 அளவுக்கு ஆயுள்காப்பீடு எடுத்துள்ளாா்.

2019-20 ஆம் ஆண்டில் ரூ. 1,115,715 அளவில் வருவாய் ஈட்டியதாகவும், தற்போது ரூ. 50,000 கையிருப்பு வைத்திருப்பதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

ரூ. 46,21,102 மதிப்பிலான வீட்டு மனை உள்ளிட்ட அசையா சொத்துகளும் தனது பெயரில் உள்ளதாக பிரமாண பத்திரத்தில் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com