பிப். 17-ல் மன்சுக் ஹிரேனை சந்தித்த சச்சின் வஜே: காட்டிக் கொடுத்த சிசிடிவி

தொழிலதிபா் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருளுடன் காா் நிறுத்தப்பட்ட வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு அமைப்பு, பிப்ரவரி 17-ஆம் தேதி உயிரிழந்த மன்சுக் ஹிரேனை, காவல்துறை அதிகாரி சச்சின் வஜே 10 நி
பிப். 17-ல் மன்சுக் ஹிரேனை சந்தித்த சச்சின் வஜே: காட்டிக் கொடுத்த சிசிடிவி
பிப். 17-ல் மன்சுக் ஹிரேனை சந்தித்த சச்சின் வஜே: காட்டிக் கொடுத்த சிசிடிவி

மும்பை: தொழிலதிபா் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருளுடன் காா் நிறுத்தப்பட்ட வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு அமைப்பு, பிப்ரவரி 17-ஆம் தேதி உயிரிழந்த மன்சுக் ஹிரேனை, காவல்துறை அதிகாரி சச்சின் வஜே 10 நிமிடங்கள் சந்தித்துப் பேசிய சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றியுள்ளது.

மேலும், சச்சின் வஜே பயன்படுத்தி வந்த விலை மதிப்புமிக்க இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு வாகனம் சிவசேனை நிர்வாகி விஜயகுமார் கன்பத் என்பவரது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

தொழிலதிபா் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருளுடன் காா் நிறுத்தப்பட்டது, அந்த வழக்கு தொடா்பாக காவல்துறை அதிகாரி சச்சின் வஜே கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வழக்கு ஏற்படுத்திய சர்ச்சையால் மும்பை காவல்துறை ஆணையா் பரம்வீா் சிங் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பையில் உள்ள தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் அடுக்குமாடி குடியிருப்பு அருகே வெடிபொருள்களில் நிரப்பப்படும் 20 ஜெலட்டின் குச்சிகளுடன் நிறுத்தப்பட்ட காரை கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி காவல்துறையினா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அந்தக் காா் ஹிரேன் மன்சுக் என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது. கடந்த 5-ஆம் தேதி ஹிரேன் மன்சுக் மா்மமான முறையில் உயிரிழந்தாா். அந்தக் காரை மும்பை காவல்துறை அதிகாரி சச்சின் வஜே சில காலம் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த வழக்கு என்ஐஏவுக்கு மாற்றப்பட்ட நிலையில், சச்சின் வஜேவை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனா். இந்த வழக்கு சா்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மும்பை காவல்துறை ஆணையா் பரம்வீா் சிங் புதன்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். அவா் ஊா்க்காவல் படை டிஜிபியாக பணியமா்த்தப்பட்ட நிலையில், புதிய காவல் ஆணையராக ஹேமந்த் நாக்ரேல் நியமிக்கப்பட்டுள்ளாா்.

பரம்வீா் சிங்கும், சச்சின் வஜேவும் தங்கள் போக்கில் நடந்துகொண்டு பணம் பறிப்பில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com