எம்பிபிஎஸ் புத்தகத்தில் தப்லிக் ஜமாத் குறித்து சர்ச்சைப் பதிவு நீக்கம்

கரோனா பெருந்தொற்றுப் பரவக் காரணங்களாக தப்லிக் ஜமாக் கூட்டம் இருந்ததாகக் கூறப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய பதிவு நீக்கப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ் புத்தகத்தில் தப்லிக் ஜமாத் குறித்து சர்ச்சைப் பதிவு நீக்கம்
எம்பிபிஎஸ் புத்தகத்தில் தப்லிக் ஜமாத் குறித்து சர்ச்சைப் பதிவு நீக்கம்


மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான விளக்க உரை புத்தகத்தில், கரோனா பெருந்தொற்றுப் பரவக் காரணங்களாக தப்லிக் ஜமாக் கூட்டம் இருந்ததாகக் கூறப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய பதிவு நீக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடுமையான கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, அந்தப் பதிவு நீக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான பதிவுக்கு மன்னிப்பும் கோரப்பட்டுள்ளது.

எம்பிபிஎஸ் இரண்டாமாண்டு மாணவர்களுக்கான எஸன்ஷியல்ஸ் ஆஃப் மெடிகல் மைக்ரோபையாலஜி என்ற புத்தகத்தில், கரோனா பெருந்தொற்றுப் பரவக் காரணமாக, புது தில்லியில் தப்லிக் ஜமாத் கூட்டம் நடத்தப்பட்டதும் காரணம் என்று கூறப்பட்டிருந்தது.

இதற்கு இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், அந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள் டாக்டர் அபூர்வா சாஸ்திரி, டாக்டர் சந்தியா பட் ஆகியோர், மன்னிப்புக் கோரியுள்ளனர். கவனக்குறைவால் ஒரு தரப்பு மக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் இருந்த பதிவுக்கு மன்னிப்புக் கோருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், அந்த புத்தகத்தின் புதிய பதிப்பு வெளியாகும் போது நிச்சயம் இந்த பிழை இருக்காது நீக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளனர். அதோடு புத்தகம் திரும்பப் பெறப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com