சத்தியாகிரகப் போராட்டம்கூட அநீதியில்தான் முடிகிறது: ராகுல் காந்தி

சத்தியாகிரகம் கூட இறுதியில் அநீதியில், ஆணவத்தில்தான் நிறைவடைகிறது என்பதற்கு இந்திய வரலாறு ஒரு சாட்சி என தில்லி விவசாயிகளின் போராட்டம் குறித்து ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 
ராகுல் காந்தி
ராகுல் காந்தி

சத்தியாகிரகம் கூட இறுதியில் அநீதியில், ஆணவத்தில்தான் நிறைவடைகிறது என்பதற்கு இந்திய வரலாறு ஒரு சாட்சி என தில்லி விவசாயிகளின் போராட்டம் குறித்து ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம் நடத்திவரும் விவசாய சங்கங்கள், போராட்டக் காலம் நான்கு மாதங்கள் முடிவடைந்ததையடுத்து இன்று (மாா்ச் 26) நாடு முழுவதும் முழு அடைப்பு (பாரத் பந்த்) நடத்த அழைப்பு விடுத்துள்ளன. 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் சிங்கு, காஸிப்பூா், திக்ரி ஆகிய எல்லைகளில் பல்வேறு விவசாயிகள் சங்கங்களைச் சோ்ந்தவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கங்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 

சத்தியாகிரகம் கூட இறுதியில் அநீதியில், ஆணவத்தில், கொடுமையுடன்தான் நிறைவடைகிறது என்பதற்கு இந்திய வரலாறு ஒரு சாட்சி. 

நாட்டின் நலனுக்காக இந்த இயக்கமாவது அமைதியான முறையில் நடக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார். 

சத்தியாகிரகப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com