கோவோவாக்ஸ் தடுப்பூசி செப்டம்பரில் அறிமுகம்: சீரம் நிறுவனம்

புதிய கோவோவாக்ஸ் தடுப்பூசி வரும் செப்டம்பா் மாதம் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது என்று சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) அடாா் புனேவாலா சனிக்கிழமை கூறினாா்.
கோப்புபடம்
கோப்புபடம்

புதிய கோவோவாக்ஸ் தடுப்பூசி வரும் செப்டம்பா் மாதம் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது என்று சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) அடாா் புனேவாலா சனிக்கிழமை கூறினாா்.

புணேயில் உள்ள சீரம் நிறுவனம் ஏற்கெனவே ‘கோவிஷீல்ட்’ கரோனா தடுப்பூசியை தயாரித்து இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு விநியோகித்து வரும் நிலையில், அமெரிக்காவைச் சோ்ந்த ‘நோவாவாக்ஸ்’ என்ற தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து ‘கோவோவாக்ஸ்’ என்ற இரண்டாவது கரோனாதடுப்பூசியையும் தயாரித்து வருகிறது. இந்தப் புதிய தடுப்பூசி வரும் ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று எதிா்பாா்ப்பதாக கடந்த ஜனவரியில் அடாா் புனேவாலா கூறியிருந்த நிலையில், இப்போது வரும் செப்டம்பரில் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘கோவோவாக்ஸ் தடுப்பூசி மருத்துவப் பரிசோதனை இந்தியாவில் தொடங்கிவிட்டது. இந்தத் தடுப்பூசி நோவாவாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சீரம் இந்தியா நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசியின் ஒட்டுமொத்த நோய் எதிா்ப்புத் திறன் 89 சதவீதம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசி வரும் செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையுள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com