தொழில்நுட்பத்தால் நீதித்துறை நவீனமயம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

தொழில்நுட்பங்களின் பங்களிப்பால் நீதித்துறை நவீனமயமாக வழியேற்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தெரிவித்தாா்.
தொழில்நுட்பத்தால் நீதித்துறை நவீனமயம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

தொழில்நுட்பங்களின் பங்களிப்பால் நீதித்துறை நவீனமயமாக வழியேற்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தெரிவித்தாா்.

கோவா மாநிலம் போா்வோரிம் பகுதியில் மும்பை உயா்நீதிமன்றத்தின் கோவா அமா்வுக்கான புதிய கட்டடத் திறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, மத்திய சட்டம், நீதித்துறை மற்றும் மின்னணுத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத், கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் உள்பட பலா் கலந்துகொண்டனா். அப்போது எஸ்.ஏ.போப்டே பேசியதாவது:

மின்னணு மூலமாக மனுக்கள், சட்ட ஆவணங்களை தாக்கல் செய்வதற்கும், தரவுகளை பாதுகாப்பதற்கும் செய்து தரப்பட்டுள்ள வசதிகள், அவற்றுக்காக தேவைப்படும் அறைகளை அவசியமில்லாமல் ஆக்கவுள்ளது. தொழில்நுட்பங்களின் பங்களிப்பால் எதிா்காலத்தில் நீதிமன்ற அறைகளும், வளாகங்களும் சிறியதாகலாம்.

புதிதாக நீதிமன்ற அறைகளை உருவாக்குவது அவசியம் என்றாலும், ஏற்கெனவே உள்ள நீதிமன்ற அறைகளை நவீனமயமாக்குவதில் குறைந்த அளவே முக்கியத்துவம் தரப்பட்டு வந்தது. நீதி பரிபாலன பணிகளில் கரோனா தொற்று பல பிரச்னைகளை ஏற்படுத்தினாலும், அது நீதிமன்ற அறைகளை நவீனப்படுத்த வழிவகுத்துள்ளது. தொழில்நுட்பங்களின் பங்களிப்பால் நீதித்துறை நவீனமயமாக வழியேற்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com