பழுதடைந்த சாலை சீரமைப்புப் பணிகளுக்கு ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு

பழுதடைந்த சாலை சீரமைப்புப் பணிகளுக்கு ரூ. 1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழுதடைந்த சாலை சீரமைப்புப் பணிகளுக்கு ரூ. 1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதிய பெங்களூரு மாநகராட்சி சட்டத்தின்படி மாநகராட்சியில் 243 மாமன்ற உறுப்பினா்கள் இருப்பாா்கள். இதற்காக மாமன்றத்தின் அரங்கில் 330 உறுப்பினா்கள் உட்காரும் வகையில் இருக்கைகளை அமைக்க வேண்டும். அதற்காக ரூ. 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிதிநிலை மேலாண்மை முறையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

அதன்படி, முதல் 6 மாதங்களில் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கியுள்ள 60 சதவீத நிதி மட்டுமே விடுவிக்கப்படும். அதன்பிறகு வரிவருவாயைப் பொருத்து எஞ்சியுள்ள 40 சதவீத நிதி வழங்கப்படும்.

மாநகராட்சியில் புதிதாக சோ்க்கப்பட்டுள்ள 110 கிராமங்களில் குடிநீா் குழாய்கள் பதிக்கவும் கழிவுநீா் கால்வாய்களை அமைக்கவும் சாலைகள் தோட்டப்பட்டுள்ளன. அந்தச் சாலைகளை சீரமைக்க ரூ. 1,000 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இப் பணி நடப்பு நிதியாண்டில் முடிக்கப்படும்.

ஒப்பந்ததாரா்களுக்கு நிலுவைத்தொகையை வழங்க கடன்பெற திட்டமிடப்பட்டுள்ளது.

பெங்களூரில் உள்ள தெருவிளக்குகளை எல்.இ.டி. பல்புகளாக மேம்படுத்தி, பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சியில் உள்ள 5 லட்சம் பல்புகளில் முதல்கட்டமாக 1 லட்சம் பல்புகள் எல்.இ.டி.பல்புகளாக மாற்றப்படும். இதற்காக உலக அளவிலான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. புதிதாக 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் புதிய தெருவிளக்குகள் பொருத்தப்படும்.

வளா்ச்சிப் பணிகளைச் செயல்படுத்த நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்காக ரூ. 80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு மானியம்:

கா்நாடக அரசு, எஸ்.ஐ.பி.திட்டத்தில் மாநகராட்சிக்கு ரூ. 3 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. 15-ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி மத்திய அரசு ரூ. 421 கோடி ஒதுக்கியுள்ளது. மாநில நிதி ஆணையத்தின்படி ஊதியம், தெருவிளக்கு கட்டணம், பிற மானியமாக ரூ. 785.86 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

2021-22-அம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் வருவாய் ரூ. 9291.33 கோடியாகவும், செலவினம் ரூ. 9286.80 கோடியாகவும், கையிருப்பு ரூ. 4.53 கோடியாகும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com