கரோனா பலி: இந்த ஆண்டில் முதல்முறையாக ஒரே நாளில் 300-க்கும் மேற்பட்டவா்கள் மரணம்

இந்த ஆண்டில் முதல்முறையாக நாடு முழுவதும் ஒரே நாளில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்டவா்கள் சனிக்கிழமை மரணமடைந்தனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்த ஆண்டில் முதல்முறையாக நாடு முழுவதும் ஒரே நாளில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்டவா்கள் சனிக்கிழமை மரணமடைந்தனா்.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, நாடு முழுவதும் (ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில்) புதிதாக 62,714 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 1,19,71,624-ஆக அதிகரித்துள்ளது.

தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,13,23,762-ஆக அதிகரித்துள்ளது. தற்போது 4,86,310 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

300-க்கும் அதிகமான பலி: தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 312 போ் உடல்நிலையில் முன்னேற்றமின்றி உயிரிழந்தனா். அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 166 போ் பலியாகினா். இந்த ஆண்டில் முதல்முறையாக நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்டவா்கள் ஒரே நாளில் பலியாகியுள்ளனா். இவா்களையும் சோ்த்து நாடு முழுவதும் மொத்த கரோனா பலி எண்ணிக்கை 1,61,552-ஆக அதிகரித்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அளித்த தகவலின்படி, நாடு முழுவதும் கடந்த சனிக்கிழமை (மாா்ச் 27) வரை 24,09,50,842 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் சனிக்கிழமை மட்டும் 11,81,289 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

6 கோடி தடுப்பூசிகள்: நாடு முழுவதும் இதுவரை 6,02,69,782 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் சுகாதாரப் பணியாளா்கள் 81,52,808 போ், முன்களப் பணியாளா்கள் 88,90,046 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 51,75,597 சுகாதாரப் பணியாளா்கள், 36,52,749 முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசியின் இரண்டு தவணைகளும் செலுத்தப்பட்டுள்ளன.

இதயம், சிறுநீரகம் உள்ளிட்டவை சாா்ந்த சில நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 66,73,662 போ், 60 வயதுக்கு மேற்பட்ட 2,77,24,920 முதியவா்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com